1 அக்., 2012


சுப்பர் ஓவரால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி!

20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.


நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது. நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20  ஓவர்கள்  நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன்படி  இரு அணிகளும் சமநிலையை எட்டியதால் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி  விக்கெட் இழப்பின்றி 17ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் 5 பந்துகளுக்கு மட்டுமே முகம் கொடுத்த மேற்கிந்திய தீவுகள்  அணி 19  ஓட்டங்களை பெற்று இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை: