டெல்லி அணியிடம் வீழ்ந்தது கொல்கத்த
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தாவை டெல்லி அணி சுலபமாக வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த 2-வது ஆட்டத்தில் ஐ.பி.எல். அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் (ஏ பிரிவு) சந்தித்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணித் தலைவர் கம்பீர் முதலில் டெல்லி அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார். இதைத் தொடர்ந்து அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தனவும், ஷேவாக்கும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினர்.
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 36 ஓட்டங்களை சேர்த்த நிலையில், ஜயவர்த்தன (21 ஓட்டங்கள், 19 பந்து, 4 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கெவின் பீட்டர்சன் இரண்டு முறை பிடியெடுப்பு கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். இதற்கிடையே, ஷேவாக் 22 ஓட்டங்களுடன் (17 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிய பீட்டர்சனும் (14 ஓட்டங்கள்) நீடிக்கவில்லை.
10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 64 ஓட்டங்களுடன் தடுமாறிய டெல்லி அணியை இளையோர் உலக கிண்ணத்தை வெற்றிகொண்ட உன்முக் சந்தும், நியூசிலாந்தின் ரோஸ் டெய்லரும் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக ஆடி, டெல்லி அணி சவாலான ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவினர்.
கலிஸ், பாலாஜியின் பந்து வீச்சில் உன்முக் சந்த் தலா ஒரு சிக்சர் விரட்டினார். டெய்லர் தனது பங்குக்கு 36 ஓட்டங்களும் (24 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), உன்முக் சந்த் 40 ஓட்டங்களும் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்தது. கொல்கத்தா தரப்பில் நரேயன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்.பாலாஜி 2 விக்கெட் எடுத்த போதிலும் 4 ஓவர்களில் 61 ஓட்டங்களை வாரி இறைத்தார்.
அடுத்து 161 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு இர்பான் பதானும், மோர்னி மோர்கலும் அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அணித் தலைவர் கம்பீர் (0), பிஸ்லா (1), பிரன்டன் மெக்கல்லம் (0) முதல் 7 பந்துக்குள் அரங்கு திரும்பினர். கலிசும் (0) பந்து தாக்கி விரலில் ஏற்பட்ட காயத்தால் வெளியேற நேரிட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்து கொல்கத்தா அணியால் நிமிரவே முடியவில்லை. அதிகபட்சமாக மனோஜ் திவாரி 33 ஓட்டங்களும், ரஜத் பாட்டியா 26 ஓட்டங்களும் எடுத்தனர். முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 108 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெல்லி தரப்பில் இர்பான் பதான், மோர்னே மோர்கல், உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இர்பான் பதான் தெரிவு செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக