மேட்ரிட்டில் நடைபெற்ற 'லா லிகா' கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 5-1 என்ற கோல்கணக்கில் ஒசாசுனா அணியை வென்றது.
இப்போட்டியில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 4 கோல்கள் அடித்தார். இதன்மூலம் அடுத்தடுத்து 11 'லா லிகா' போட்டிகளில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் எட்டினார்.
இதற்கு முன்பு பார்சிலோனா அணிக்காக விளையாடிய மரியானோ மார்ட்டின், பிரேசிலின் ரொனால்டோ ஆகியோர் அடுத்தடுத்து 10 போட்டிகளில் கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை கடந்த ஆண்டே மெஸ்சி சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசன் 'லா லிகா' போட்டிகளில் 33 கோல்கள் அடித்துள்ள 25 வயதான மெஸ்சி, லா லிகா போட்டிகளில் 200 கோல்களைக் கடந்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதுவரை 235 'லா லிகா' போட்டிகளில் ஆடியுள்ள அவர், மொத்தம் 202 கோல்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன்பு 7 பேர் 200 கோல்களைக் கடந்து சாதனை படைத்திருந்தாலும், அவர்களில் டெல்மோ சாரா 29வது வயதில் 200 கோல்களைக் கடந்ததே முந்தைய இளம்வயது சாதனையாக இருந்தது. அதனை இப்போது மெஸ்சி முறியடித்துள்ளார்.
முன்னதாக நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜிடாபி அணியை வென்றது.
ரியல் மேட்ரிட் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 20வது ஹாட்ரிக் கோலை பதிவு செய்ததுடன், இதுவரை 499 கிளப் போட்டிகளில் 302 கோல்கள் அடித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக