இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இளம் வீரரான வீராட் கோஹ்லி 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் 49 ஓட்டங்களை எட்டிய போது ஒருநாள் போட்டியில் 4 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச அளவில் இரண்டாமிடத்தை பிடித்தார்.
96வது போட்டியில் விளையாடும் கோஹ்லி தனது 93வது இன்னிங்சில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவர் விவியன் ரிச்சர்ட்ஸ் தனது 96வது போட்டியில் 88வது இன்னிங்சில் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக