இங்கிலந்து கால்பந்து அணியின் முன்னாள் டேவிட் பெக்காம் ஆர்சனல் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த டேவிட் பெக்காம் கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்க கால்பந்து அணியான லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணியில் இணைந்தார்.
கேலக்சிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடிய அவர், கடந்த டிசம்பர் மாதம் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தற்போது குடும்பத்துடன் இங்கிலந்து திரும்பியுள்ள பெக்காம், லண்டனை சேர்ந்த ஆர்சனல் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அவர் ஆர்சனல் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். 37 வயதான பெக்காம் உடல்தகுதியுடன் இருந்தால் அவரை ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக ஆர்சனல் அணி அறிவித்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக