27 ஜன., 2011


மெல்பர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதியில் உலகின் நம்பர் 1 வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியுற்றார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸி. ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சக நாட்டு வீரர் டேவிட் பெர்ரரை நேற்று எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பெர்ரர் முதல் செட்டை 6&4 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்களிலும் பெர்ரரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய நடால் எளிதில் சரணடைந்தார்.

டேவிட் பெர்ரர் 6&4, 6&2, 6&3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் ஜெர்மனியின் ஆன்டி முரே 7&5, 6&3, 6&7, 6&3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் டோல் கபோலாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்வானரோவா அபாரம்: மகளிர் ஒற்றையர் போட்டியின் கால்இறுதியில் வேரா ஸ்வோனரோவா 6&2, 6&4 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் பெட்ரோ குவிட்டோவாவை வீழ்த்தினார். மற்றொரு கால்இறுதியில், கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), 6&3, 7&6 (4) என்ற நேர் செட் கணக்கில் போலந்தின் ரட்வன்ஸ்காவை தோற்கடித்தார்.

லியாண்டர் & மகேஷ் ஜோடி அசத்தல்: ஆண்கள் இரட்டையர் பிரிவு அரைஇறுதியில் விளையாட இந்தியாவின் லியாண்டர் பயஸ் & மகேஷ் பூபதி ஜோடி களம் இறங்கியது. நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய ஜோடி 6&4, 6&4 என்ற நேர் செட் கணக்கில் மிச்சேல் நாட்ரா (பிரான்ஸ்) & ஜிரேமன்ஜிக் (செர்பியா) ஜோடியை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் போட்டியின் 2வது சுற்றில் லியாண்டர் பயஸ் & காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி தோல்வியுற்ற நிலையில், மகேஷ் பூபதி & ரோடினோவா (ஆஸ்திரேலியா) ஜோடி வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை: