பெப்ரவரியில் ஆரம்பமாகவிருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் இறுதி 15 பேர் கொண்ட அணி நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பலத்த ஆட்சேபணைகளுக்கு மத்தியில் அரவிந்த டி சில்வா தலைமையிலான தேர்வுக்குழுவும், சிறிலங்கா கிரிக்கெட் சம்மேளனமும் இணணந்து மேற்கொண்ட தெரிவுகளின் படி, இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட காரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்ய மற்றும், நம்பிக்கை பந்துவீச்சாளராக திகழ்ந்த சமிந்த வாஸ் இருவருக்கும் உலக கிண்ண போட்டிகளுக்காக அணியில் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை.
எனினும், அண்மையில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
96 ம் ஆண்டு உலக கிண்ணத்தை இலங்கை சுவீகரிக்க முக்கிய காரணமாக திகழ்ந்த சனத் ஜெயசூர்ய மற்றும் சமிந்த வாஸ் இருவரையும் அணியில் இணணக்காதது அவர்களது தீவிர ரசிகர்களிடையே கவலையை தோற்றுவித்திருக்கிறது.
இருவருக்கும் வயதாகிவிட்ட போதும், அணிக்கு தேவையானவர்களாகவே கணிக்கப்பட்டனர். எனினும், ஜெயசூர்ய அரசியலில் குதித்து விட்டதால், அவரை மறுபடி கிரிக்கெட்டிற்குள் நுழைப்பது கடினமானது எனவும், சமிந்த வாஸ் நீண்ட நாட்களாக விளையாடததால் ஃபோர்மில் இல்லையெனவும் தேர்வுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா முன்னர் தெரிவித்திருந்தார்.
உலக கிண்ண போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட இறுதிக்குழு விபரம்
குமார் சங்ககார
மஹெல ஜெயவர்த்தன
டில்ஷான்
முத்தையா முரளிதரன்,
திசார பெரேரா
ஆஞ்சலோ மத்திவ்ஸ்
உபுல் தரங்க
லசித் மலிங்க
சாமர சில்வா
திலான் சமரவீர
சாமர கபுகெதர
நுவான் குலசேகர
அஜந்த மெண்டிஸ்
டில்ஹாரே பெர்னாண்டோ
ரங்கன ஹேரத்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக