லயோனல் மெஸ்ஸி மீண்டும் சிறந்த வீரராகத் தேர்வு
[ செவ்வாய்க்கிழமை, 11 சனவரி 2011, 02:41.52 பி.ப GMT ]
ஃபீபா உலகக் கால்பந்துக் கூட்டமைப்பின் உலகத்தின் சிறந்த வீரராக மீண்டும் அர்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு இனியெஸ்டா அல்லது சாவி போன்ற ஸ்பெயின் வீரர்களுக்கு இந்த விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெஸ்ஸி அவர்களை வீழ்த்தினார்.
1988/89 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஹாலந்து கால்பந்து நட்சத்திரம் வான் பாஸ்டன் அடுத்தடுத்து உலகின் சிறந்த வீரர் விருது பெற்றார்.
அதன் பிறகு தற்போது லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக