பருத்தித்துறை லீக் அணிக்கு ஜனாதிபதி பாராட்டு
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-10 07:35:08| யாழ்ப்பாணம்]
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 45 லீக் அணிகளுக்கிடையில் நடைபெற்று வந்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு யாழ். மாவட்டத்திலிருந்து முதற் தடவையாக பருத்தித்துறை லீக் அணி தெரிவானது.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் அணியினர் கொழும்புக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் நேற்றுமுன்தினம் பருத்தித்துறை லீக் உதைபந்தாட்ட அணியினரை சந்தித்த மஹிந்த ராஜபக்ச லீக் அணியினரைப் பாராட்டியதுடன் லீக் அணியின் போக்குவரத்துச் செலவிற்கென ஒரு இலட்சத்து 36ஆயிரம் ரூபா காசோலையை லீக் தலைவர் டி.எம்.வேதாபரணம், செயலாளர் ரி.வரதராஜன் ஆகியோரிடம் கையளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக