6 நவ., 2010

04th Nov 2010
மரடோனாவுக்கு வயது 50 அவரை பற்றிய தகவல்கள் 50

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா கடந்த அக்டோபர் 30ந் தேதி தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்த சமயத்தில் மரடோனாவை பற்றிய 50 சுவாரஸ்யத் தகவல்கள் இங்கே...!
1.டீகோ அர்மான்டோ மரடோனா பியூனஸ் அயர்ஸ் நகரில் 1960ம் ஆண்டு அக்டோபர் 30ந் தேதி பிறந்தார்.
2. அர்ஜென்டினாவுக்காக 94 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மரடோனா 34 கோல்களை அடித்துள்ளார்.
3.தாய்நாட்டுக்காக 4 உலக கோப்பை போட்டிகளில் (1982,86,90,94)விளையாடியுள்ளார்.
4.1982ல் மரடோனா விளையாடிய போது,போகா ஜுனியர் அர்ஜென்டினா லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது.தெடர்ந்து 1984ம் ஆண்டு பார்சிலோனாவுக்கு தாவிய மரடோனா பின்னர் 1987ம் ஆண்டு நேபோலியில் இணைந்தார்.இந்த 3 ஆண்டுகளில் இரு முறை நேபோலி சீரி 'ஏ' பட்டத்தை வென்றது.
5.உலக கோப்பையில் மட்டும் கேப்டனாக 16 போட்டிகளில் மரடோனா பங்கேற்றுள்ளார்.உலக கோப்பையில் வேறு எந்த வீரரும் செய்திராத சாதனை இது.
6.உலக கோப்பை போட்டியில் 21 ஆட்டங்களில் மரடோனா பங்கேற்றுள்ளார்.
7.1976ம் ஆண்டு அக்டோபர் 20ந் தேதி 16 வயது மரடோனா அர்ஜென்டினோஸ் ஜுனியர் அணியில் இடம் பெற்றார்.
8.1979ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டடோர் உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியில் மரடோனா இடம் பெற்றிருந்தார்.இந்த போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் ஆனது.
9.1977 பிப்ரவரி 27ந் தேதி 16 வயது மரடோனா முதல் சர்வதேச போட்டியில் ஹங்கேரியை எதிர்த்து களம் இறங்கினார்.பியூனஸ் அயர்சிலுள்ள பொம்பரானா ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடந்தது.
10.மரடோனாவின் கையில் சேகுவாராவின் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது.
11.1986ம் ஆண்டு மெக்சிகோ உலக கோப்பை போட்டியில் மரடோனாவுக்கு எதிராக 56 முறை பவுல் நடந்தது.இதுவும் கூட ஒரு உலக சாதனைதான்.
12.1986ம் ஆண்டு உலக கோப்பையை மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா கைப்பற்றியது.
13.1986ம் ஆண்டு உலக கோப்பையில் தங்க பந்து விருதும் மரடோனாவுக்குதான்.
14.1986ம் ஆண்டு உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை அர்ஜென்டினா சந்தித்தது.இந்த போட்டியின் போதுதான் மரடோனா தலையால் முட்டுவது போல் கையை பயன்படுத்தி கோல் அடித்தார்.இதுதான் பின்னால் 'ஹேன்ட் ஆப் கார்ட்' என்று உலக புகழ்பெற்றது.
15.1987ல் நேபோலியுடன் சீரி 'ஏ' பட்டத்தையும் 1989ம் ஆண்டு 'யூபா' கோப்பையையும் 1990ம் ஆண்டு மீண்டும் சீரி 'ஏ'வில் நேபோலியுடன் பட்டத்தை மரடோனா கைப்பற்றினார்.
16.1994ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை போட்டியில் மரடோனா இரு போட்டிகளில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டார்.இதில் கிரீஸ் அணிக்கு எதிராக ஒரு கோலும் அடித்திருந்தார். பின்னர் போதை மருந்து பயன்படுத்திய காரணத்திற்காக அர்ஜென்டினாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
17.1989ம்ந்தேதி நவம்பர் 7ந் தேதி கிளாடியா என்பவரை மரடோனா திருமணம் செய்தார்.திருமண பந்தம் 2004ம் ஆண்டு பிரிவுக்கு வந்தது.
18.2005ம் ஆண்டு அர்ஜென்டினா டி.வி.யில் மரடோனா 'தி நைட் ஆப் தி நம்பர் 10' என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தினார்.இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக கலந்து கொண்டவர் பீலே.இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடித்தனர்.
19.2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நியமிக்கப்பட்டார்.
20.தென்ஆப்பிரிக்க உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் பொலிவியாவிடம் அர்ஜென்டினா 6&1 என்ற கோல் கணக்கில் தோற்றதால் மரடோனா மீது கடும் விமர்சனம் எழுந்தது.ஆனால் கடைசியாக பெருவை 1&0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒரு வழியாக உலக கோப்பை போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது.இதையடுத்து தன்னை விமர்சித்தவர்களை மிக மோசமான கெட்ட கெட்ட வார்த்தைகளால் மரடோனா திட்டினார்.இதனால் அவருக்கு 2 மாதங்கள் 'பிபா' தடை விதித்தது.
21.2008ம் ஆண்டு நவம்பர் 19ந் தேதி மரடோனா பயிற்சியின் கீழ் அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை சந்தித்தது.இந்த போட்டியில் 1&0 என்று வெற்றியும் பெற்றது.
22.2010 ஜுன் 22ந் தேதி ஜபுலானியை 'யூஸ்லெஸ்' என்றும் 'கண்ட்ரோல்' செய்வதில் சிரமம் என்றும் ஜபுலானி தயாரிப்புக்கு காரணமாக இருந்த 'பிபா' மற்றும் நைக் நிறுவன அதிகாரிகளையும் மரடோனா விமர்சித்தார்.
22.கடந்த உலக கோப்பை போட்டி தகுதி சுற்று ஆட்டத்தின் போது, ஒரு பிரஸ்மீட்டில் முன்னாள் நேபோலி வீரரும் இப்போது பத்திரிக்கையாளருமான சல்வாடர் பக்னியை மரடோனா கண்டார்.பிரஸ்மீட் முடிந்ததும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும் பக்னியின் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுத்தார் மரடோனா.அப்போது பக்னி உதிர்த்த வார்த்தைகள் மரடோனா ஒரு குழந்தை கள்ளம் கபடமற்றவர்.
23.மரடோனா கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றதும் கவுரவப்படுத்தும் விதத்தில் அவர் அணிந்து விளையாடிய 10ம் எண் ஜெர்சிக்கு நிரந்தர விடை கொடுக்க 'பிபா'விடம் அனுமதி கோரியது.இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
24.பியூனஸ் அயர்சிலுள்ள அர்ஜென்டினோஸ் ஜுனியர்ஸ் அணிக்கு சொந்தமான ஸ்டேடியத்தின் பெயர் 'ஆப்டர் மரடோனா'.
25.1986ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை அர்ஜென்டினா தோற்கடித்தது.அப்போது மரடோனா சொன்னது,இது ஒரு கால்பந்து அணியை தோற்கடித்தது போன்ற உணர்வை எனக்கு தரவில்லை.இங்கிலாந்து என்ற ஒரு நாட்டை அர்ஜென்டினா போரில் தோற்கடித்தது போன்ற உணர்வை எனக்கு இந்த வெற்றி தந்துள்ளது என்றார்.(அப்போது இங்கிலாந்துக்கும் அர்ஜென்டினாவுக்கும் பாக்ஜலசந்தி தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது.)
26.நான் போதைக்கு அடிமை. போதைக்காக ஒவ்வொரு நாளும் சண்டை போடுகிறேன்&1196ல் மரடோனா சொன்ன வார்த்தைகள் இது.
27.2000&ம் ஆண்டு இந்த செஞ்சுரியின் சிறந்த கால்பந்து வீரர்களாக மரடோனா&பீலே இருவரையும் 'பிபா' தேர்வு செய்தது.ஆனால் இணைய வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றது மரடோனா.இந்த குழப்பத்திற்கு பின்தான் இருவருக்குமே விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.இதனை மரடோனா விமர்சனம் செய்ய, ''மரடோனா தான் மட்டுமே சிறந்தவர் என்று நினைப்பது அவருடைய பிரச்சினை'' என்றார் பீலே.
28.1990ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அப்போதைய அர்ஜென்டினா பயிற்சியாளர் கார்லஸ் பிலரோடாவிடம் ஸ்டார்ட்டிங் லெவன் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அளித்த பதில், மரடோனாவுடன் டென் அதர்ஸ்.
29.கடந்த 2005ம் ஆண்டு போகா ஜுனியர்சின் துணைத் தலைவராக மரடோனா நியமிக்கப்பட்டார்.ஒரு வருடம் கழித்து இந்த பதவியை மரடோனா ராஜினாமா செய்தார்.
30.செர்பிய படத்தயாரிப்பாளர் எமீர் குஸ்டரிகா மரடோனா பற்றிய ஒரு குறும்படம் தயாரித்துள்ளார்.இந்த படம் 2008ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
31.1986ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சர் பாப் ராப்சன்,ஆர்சனலுக்காக மரடோனா ஆடியிருந்தால் அந்த அணி நிச்சயம் உலக கோப்பையை வென்றிருக்கும் என்றார்.
32.1978ம் ஆண்டு 18 வயது மரடோனாவை பார்த்து இங்கிலாந்து தடுப்பாட்டக்காரர் பில் நியால்,''இவர் சிறந்த கால்பந்தாட்டக்காரனாக வருவான் என்று கண்டதும் கண்டு கொண்டேன் என்றார்.
33.1998ம் ஆண்டு பியூனஸ் அயர்சில் மரடேனாவுக்கு கோவில் கட்டப்பட்டது. அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மரடோனா ரசிகர்கள் இங்கு வழிபாடு நடத்துகின்றனர்.
34.1986ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் மரடோனா அடித்த 2வது கோல் (முதல் கோல் ஹேன்ட் ஆப் கார்ட்) இந்த செஞ்சுரியின் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டது.இங்கிலாந்து கேப்டன் பீட்டர் ஷில்ட்டன் உள்பட 6 வீரர்களை தனி ஆளாக கடத்தி இந்த கோலை மரடோனா அடித்தார்.
35.பிடல் கேஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர் மரடோனா.
36.1991ம் ஆண்டு நேபோலியில் இருந்து மரடோனா விலகினார்.கோகைன் உட்கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
37.2006ம் ஆண்டு ஜெர்மனி உலக கோப்பை போட்டியின் துவக்க விழாவில் மரடானா கலந்து கொள்ள மறுத்தார்.பீலேவும் அதில் கலந்து கொள்ள இருந்ததே இதற்கு காரணம்.முட்டாள் பீலே,ரசிகர்களுடன் மைதானத்தில் வலம் வருவதை காண சகிக்க முடியவில்லை என்றும் சொன்னார்.
38.மரடோனா இத்தாலி அரசுக்கு 37 மில்லியன் யூரோ வரி பாக்கி வைத்துள்ளார்.
39.அர்ஜென்டினாவுக்காக அதிக கோல் அடித்த வீரர்களில் மரடோனாவுக்கு 3வது இடம். கேப்ரியல் படிஸ்டுடா முதலிடத்திலும் ஹெர்மன் கிரெஸ்போ 2வது இடத்திலும் உள்ளனர்.
40.அர்ஜென்டினோஸ் ஜுனியர்ஸ்,போகா ஜுனியர்ஸ்,பார்சிலோனா,செவிலா,நேபோலி,நியூவெல் ஓல்டு பாய்ஸ் போன்ற அணிகளுக்காக மரடோனா விளையாடியுள்ளார்.
41.1991ம் ஆண்டு கோகைன் உட்கொண்டதற்காக மரடோனாவுக்கு 15 மாதங்கள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டது.
41.மரடோனா தனது 37வது பிறந்தநாளில் 1997ம் ஆண்டு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
42.மரடோனா முதன்முதலில் விளையாடிய கால்பந்து அணியின் பெயர் அர்ஜென்டினோஸ் ஜுனியர்ஸ்.இந்த அணியின் இளையோர் பிரிவில் மரடோனா இடம் பெற்றார்.அப்போது அவருக்கு வயது 12.
43.1976 முதல் 1981 வரை அர்ஜென்டினோஸ் ஜுனியர்ஸ் அணியின் சீனியர் அணியிலும் மரடோனா விளையாடி வந்தார்.பின்னர் புகழ்பெற்ற போகா ஜுனியர்சில் அவர் இணைந்தார்.
44.2000ம் ஆண்டு 'நான் டீகோ' என்ற பெயரில் மரடோனாவின் சுயசரிதை வெளி வந்தது.
45.2000ம் ஆண்டு இந்த செஞ்சுரியின் சிறந்த கால்பந்து வீரர் யார்? என்ற ஓட்டெடுப்பை 'பிபா' நடத்தியது.இதில் மரடோனா 53.6 சதவீத ஓட்டுக்களை பெற்று முதலிடம் பிடித்தார். பின்னர் பீலே மற்றும் மரடோனாவுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.
46.2010 மார்ச் 22 ந்தேதி உலகின் தலைசிறந்த 10 கால்பந்து வீரர்கள் யார்?என்ற ஓட்டெடுப்பை லண்டன் டைம்ஸ் நடத்தியது.இதிலும் மரடோனாவுக்கே முதலிடம் கிடைத்தது.
47.மரடோனாவுக்கு டால்மா,ஜெனைனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
48.இத்தாலியில் மரடோனா விளையாடிய போது இன்னொரு பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார்.அவருக்கு பிறந்த மகன் பெயர் டீகோ சினகரா.மரடோனா இத்தாலியில் இருந்து வெளியேறிய பின்னர் தந்தையும் மகனும் சந்தித்துக் கொண்டது இல்லை.கடந்த 2003ம் ஆண்டு நேப்பிள்ஸ் நகரில் ஒரு கோல்ப் கிளப்பில் தந்தையை முதல் முறையாக சந்தித்தார் ஜுனியர் டீகோ.இவரும் ஒரு கால்பந்தாட்ட வீரர்தான். வயது 21 மட்டுமே.
49.வெனிசூலா அதிபர் ஹீயுகோ சாவசும் மரடோனாவும் நெருங்கிய நண்பர்கள்.
50.தென்ஆப்பிரிக்க உலக கோப்பை போட்டி முடிந்ததும் மரடோனா பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: