20 நவ., 2010

100 தங்கத்தை குவித்த சீனா

asian16 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி தங்கப்பதக்கத்தைத் தொடர்ந்து வேட்டையாடுகிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டி முடிவில் சீனா 97 தங்கம்,39 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தது.நேற்றும் சீனாவின் ஆதிக்கம் நீடித்தது. 100 ஆவது தங்கப்பதக்கத்தை தாண்டியது. காலை 11 மணியளவில் அந்த அணியின் தங்கப்பதக்க எண்ணிக்கை 105 ஆக உயர்ந்தது.சீனாவுக்கு மற்ற எந்த நாடுகளும் போட்டியில்லாதளவுக்கு அந்த அணி உச்சத்தில் உள்ளது. அந்நாட்டு வீர,வீராங்கனைகள் அனைத்து விளையாட்டிலும் முத்திரை பதித்து வருகிறார்கள்.
சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ள தென்கொரியா 29 தங்கத்துடன் உள்ளது. ஜப்பான் 3 ஆவது இடத்திலுள்ளது.இதேநேரம், ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.கடந்த 14 ஆம் திகதி ஒரு தங்கம்,4 வெள்ளி,3 வெண்கலத்துடன் பட்டியலில் 7 ஆம் இடத்திலிருந்தது. இந்நிலையில், தற்போது இந்தியா பட்டியலில் 11 ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது.டில்லி கொமன்வெல்த்தில் அதிக பதக்கங்கள் குவித்ததன் மூலம் ஆசியப் போட்டியிலும் இந்திய துப்பாக்கி சுடும்வீரர்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: