உலக கிண்ண தொடருக்கான உத்தேச இலங்கை அணியில் ஜெயசூரிய, வாஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 14 டிசெம்பர் 2010, 01:13.00 பி.ப GMT ] |
உலக கிண்ண தொடருக்கான உத்தேச இலங்கை அணியில் ஜெயசூர்யா, ஷமிந்த வாஸ் உள்ளிட்ட பழமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகள் இணைந்து நடாத்தும் உலக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பெப்பரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 2 ஆம் திகதி மட்டும் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான 29 பேர் கொண்ட உத்தேச அணியை, இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது. இதில் அனுபவ வீரர்களான சனத் ஜெயசூர்ய, சமிந்த வாஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இவர்கள் இருவரும், நீண்ட நாட்களாக சர்வதேச ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. எனினும் தற்போது இவர்களுடைய பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரனும் இடம் பெற்றுள்ளார். இதுவரைக்கும் 444 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சனத், துடுப்பாட்டத்தில் 13 ஆயிரத்து 428 ஓட்டங்களையும், பந்து வீச்சில் 322 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும் 322 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள வாஸ், துடுப்பாட்டத்தில் 2 ஆயிரத்து 25 ஓட்டங்களையும், பந்து வீச்சில் 400 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார். குழு ஏ --------- சிறிலங்கா .அவுஸ்த்ரேலியா .பாகிஸ்தான் .நியூசீலந்து.கென்யா.ஜிம்பாப்வே .கனடா குழு பீ --------- இந்தியா .இங்கிலாந்து .தென்னாபிரிக்கா.மேற்கு இந்திய தீவுகள்.அயர்லாந்து .பங்களதேஸ்.நெதர்லாந்து |
14 டிச., 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக