6 டிச., 2010

காம்பீர் அடித்தார் சதம் இந்தியாவுக்கு ஹட்ரிக் வெற்றி[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-05 12:07:06| யாழ்ப்பாணம்]
காம்பீரின் அதிரடிச் சதம் கைகொடுக்க இந் திய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைத் தனதாக்கியது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இதில் டெஸ்ட் தொடரைக் 1:0 என்ற கணக் கில் கைப்பற்றிய இந்திய அணி தொடர்ந்து நடை பெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று வரோதராவில் நடைபெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் காம்பீர் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு நியூசிலாந்து அணியை அழைத்தார்.இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முன்னணி வீரர்கள் சோபிக் காத நிலையில் 50 ஓவர்களில் 09 விக்கெட்டுக் களையிழந்து 224 ஓட்டங்களை எடுத்தது.

இதில் பிராங்கிலின் ஆட்டமிழக்காமல் 108 பந்துகளில் (05 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட் பட) 72 ஓட்டங்களையும், நாதன் மக்குலம் 53 பந்துகளில் (04 பவுண்டரிகள் உட்பட) 43 ஓட் டங்களையும், ஸ்ரைரிஸ் 22, வில்லியம்ஸன் 21 ஓட்டங்களையும் எடுத்தனர்.பந்துவீச்சில் சகிர்கான், அஸ்வின், யூசுப்ப தான் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும், பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 50 ஓவர்களில் 225 ஓட்டங்க ளை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப் பெடுத்தாடிய இந்திய அணி காம்பீரின் அதிரடிச் சதத்தின் மூலம் 39.3 ஓவர்களில் ஒரு விக் கெட்டை மாத்திரமிழந்து 229 ஓட்டங்களைக் குவித்து 09 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதில் அணித்தலைவர் கெளதம் காம்பீர் 117 பந்துகளில் (16 பவுண்டரிகள் உட்பட) 126 ஓட் டங்களையும், விராட் ஹோலி 70 பந்துகளில் (06 பவுண்டரிகள், 02 சிக்ஸர்கள் உட்பட) 63 ஓட் டங்களையும் ஆட்டமிழக்காது எடுத்ததுடன் முரளி விஜய் 30 ஓட்டங்களையும்எடுத்தார்.

இவ் வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக் கில் தனதாக்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு சதமடித்து அசத்திய அணித்தலைவர் காம்பீர் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

கருத்துகள் இல்லை: