மேற்கிந்திய தீவுகள் அதிரடி ஆட்டம் : 115 ரன்களுடன் சுருண்டது நெதர்லாந்து |
[ திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011, 04:29.01 பி.ப GMT ] |
கிரிஸ் கெய்ல், போலார்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 330 ரன்களைக் குவித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, வேகப்பந்து வீச்சாளர் கீமர் ரோச்சின் ஹாட்ரிக்கால் 215 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்த பி பிரிவு ஆட்டத்தில் பூவா தலையா வென்ற நெதர்லாந்து அணி, மேற்கிந்திய அணியை முதலில் களமிறக்கிறது. கிரிஸ் கெய்லும், ஸ்மித்தும் முதல் விக்கெட்டிற்கு 16.3 ஒவர்களில் 100 ரன்களைக் குவித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஸ்மித் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், கெய்ல் 7 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களுடன் 80 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கெய்ல் மிக நிதானமாகவே ஆடி 110 பந்துகளில் 80 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு ஆடவந்த போலார்ட் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 5 பவுண்டரிகளுடனும், 4 சிக்சர்களுடனும் 60 ரன்களை அடித்துக் குவித்தார். மேற்கிந்திய அணி 50 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது. மிகப்பெரிய வெற்றி இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி, கீமர் ரோச், பென் ஆகியோரின் வேகப்பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நெதர்லாந்து அணியின் கூப்பர் மட்டுமே நின்றாடி 55 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார். முதாசர் புகாரி 24 ரன்கள் எடுத்தார். கடைசி மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் ரோச் வீழ்த்த 115 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. 8.3 ஓவர்களில் 27 ரன்களைக் கொடுத்த 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கீமர் ரோச் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். |
28 பிப்., 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக