25 பிப்., 2011


முரளியின் பிரியாவிடை பரிசாக உலக கிண்ணம் வெல்ல வேண்டும் : சாமர கப்புக்கெதர
[ வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011, 06:13.54 மு.ப GMT ]
உலகக்கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளிலில் இருந்தும் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள வரலாற்று சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனுக்கான பிரியாவிடைக் கிண்ணமாக இலங்கை உலகக்கிண்ணத்தை வெற்றி பெறவேண்டும் என சாமர கப்புக்கெதர தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 521 விக்கெட்டுகளையும் பெற்றிருக்கும் முரளிதரன், கடந்த வருடம் ஜூலை மாதம் ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சகலரும் இணைந்து உலகக்கிண்ணத்தை பெற்று அதனை பிரியாவிடை பரிசாக முரளிதரனுக்கு அளித்து வழியனுப்பிவைப்பதே அவரை சிறந்த கௌரவபடுத்தலாகும் எனவும் கப்புக்கெதர தெரிவித்துள்ளார்.
இதேவளை சனிக்கிழமை பாகிஸ்தான் அணியுடன் சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள போட்டி தமக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: