25 பிப்., 2011



உலக கோப்பை: வங்கதேசம் வெற்றி

உலக கோப்பை போட்டியில் டாக்காவில் நடக்கும் போட்டியில் வங்காள தேசம் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேச அணி 49.2 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
அதிகபட்சமாக தமிம் இக்பால் 44 ரன்களும், ரகிபுல் ஹசன் 38 ரன்களும் எடுத்தனர். ரகிம் 36 ரன்கள், இஸ்லாம் 29 ரன்கள் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் போத்தா 3 விக்கெட்டுகளும், ஜான்ஸ்டன், டாக்ரெல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 45 ஓவரில் 178 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் வங்காளதேசம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை: