28 பிப்., 2011


கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி
[ திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011, 10:44.58 மு.ப GMT ]
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 12 வது போட்டி ஜிம்பாப்வே – கனடா அணிகளுக்கிடையில் நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்பமே ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தது. முதலாவது பந்து வீச்சிலேயே பிரன்டன் டெய்லர் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சார்ல்ஸ் கவன்ரி 4 ஓட்டங்களோடு வெளியேறினார். இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட டெடன்டா டைபு மற்றும் கிரெய்க் ஹேர்வின் ஆகியோர் தமக்குள் 150 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
டைபு 2 ஓட்டங்களால் சத்தினை தவரவிட்டு 99 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஹேர்வின் 85 ஓட்டங்களோடு களத்தை விட்டு வெளியேறினார்.
பந்து வீச்சில் பாலாஜி ராவு 10 ஓவர்கள் பந்துவீசி 57 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
299 இலக்காக கொண்டு களமிறங்கிய கனடா அணி 42.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை: