26 பிப்., 2011


அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ;இந்த பெருமை
 வைகோவை சேரும் :நாஞ்சில் சம்பத்


குமரி மாவட்ட மதிமுக இளை ஞரணி சார்பில் குமரி மாவட்ட மதிமுக புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பொதுக் கூட்டம் நாகர்கோவில் வடசேரியில்  நடைபெற்றது.

கூட்டத்தில் மதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அப்போது அவர்,   ‘’தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை, நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கத்தின் விலை கூட விண்ணை எட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.


2001ம் ஆண்டு 1 பவுன் 4,000 ஆக இருந்தது. ஆனால் இப்போது ஒரு பவுன் 18 ஆயிரமாகி இருக்கிறது. ஏழை குடும்பங்கள் பெரும் பரி தவிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இந்தியாவில் பெரிய பிரச்சனை தண்ணீர் தான். கண்ணீரால் இந்த நாடு உடையாது. ஆனால் தண்ணீரால் உடைய போகிறது.


விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆணையத்தின் முன் ஆஜராகி வைகோ வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் வரை வாதாடி வென்றவர் வைகோ. அடுத்த கட்டமாக கச்சத்தீவு பிரச்னை மீட்க வைகோ தயாராகி வருகிறார். 


விரைவில் இது தொடர் பான வழக்கில் வைகோ வாதாடி, தமிழக மீனவர்களுக்கு வெற்றியை வாங்கி தருவார். பாகிஸ்தானில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் சிறையில் பல ஆண்டுகளாக வாடினர்.

அவர்களை மீட்டு கொண்டு வந்தது வைகோ. கடியப்பட்டணம், இணையம், கோடிமுனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 44 மீனவர்கள் கத்தார் சிறையில் வாடினர். இவர்களில் இன்னும் 17 பேர் சிறையில் தான் இருக்கிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணி வலுவாகி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இந்த பெருமை வைகோவை சேரும்’’ என்று தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை: