23 மார்., 2011

112 ரன்களுடன் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்: அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி
[ புதன்கிழமை, 23 மார்ச் 2011, 02:36.02 பி.ப GMT ]
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 10 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது.

பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 43.3 ஓவர்களில் 112 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது. சிவ்நாரின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் அணித்தலைவர் சஹீட் அவ்ரிடி 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது. கம்ரன் அக்மல் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் மொஹமட் ஹாபிஸ் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொஹமட் ஹாபிஸ் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் பாகிஸ்தான் அணி அரையிறுதியில் மோதவுள்ளது.

இந்த அரையிறுதிப்போட்டி இந்தியாவின் மொஹாலி நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக 2007 ஆம் ஆண்டின்பின்னர் பாகிஸ்தான் அணி முதல் தடவையாக இந்தியாவுக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: