உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி Bangalore புதன்கிழமை, மார்ச் 16, 6:43 PM IST மதிப்பீடு இல்லை
இமெயில் பிரதி
பெங்களூர், மார்ச்.16-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பெங்களூரில் நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-கனடா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய கனடா அணியின் தொடக்க வீரர்கள் பட்டேல், டேவிசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 3.5 ஓவர்களில் 41 ரன்கள் குவித்தது. டேவிசன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய பட்டேல் 45 பந்துகளில் 54 ரன்கள் (45 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 11.3 ஓவர்களில் 82 ஆக இருந்தது.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பகாய், சுர்கரி ஒரளவு நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் சேர்த்தனர். பகாய் 39 ரன்களும், சுர்கரி 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் கனடா அணி 45.4 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் பிரட் லீ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் பிராட் ஹேடின், மைக்கேல் கிளார்க் சிறப்பாக விளையாடினர். பிராட் ஹேடின் 84 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 88 ரன்களும், வாட்சன் 90 பந்தில் 9 பவுண்டரி 4 சிக்சருடன் 94 ரன்களும் எடுத்தனர். பிராட் ஹேடின், மைக்கேல் கிளார்க் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக