243 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது
வியாழன், 17 மார்ச் 2011( 18:16 IST )
சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் பி-பிரிவு ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து அணியை 48.4 ஓவர்களில் 243 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது.
துவக்கத்தில் நன்றாக ஆடி, நடுவில் சரிந்து பிறகு இறுதி ஓவர்களில் சற்றே எழுச்சி பெற்றனர் இங்கிலாந்து.
ஒரு நேரத்தில் மோர்கன் ஆட்டமிழந்தபோது 28-வது ஓவரில் 134/5 என்று சரியும் அபாயத்தில் இருந்தது இங்கிலாந்து.
அந்த நேரங்களில் இளம் லெக் ஸ்பின்னர் தேவேந்திர பிஷூ அபாரமாக வீசினார். பொபாரா 7 ரன்கள் எடுத்து ரசல் பந்தில் பவுல்டு ஆனார். பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டுச் சென்றது.
டிரெட்வெல், லூக் ரைட் இணைந்து 7 ஓவர்களில் 41 ரன்களைச் சேர்த்தனர். இதில் டிரெட்வெல் 9 ரன்கள் எடுத்து மோசமான முறையில் ரன் அவுட் ஆனார்.
கடைசியில் லூக் ரைட் 44 ரன்கள் எடுத்து பிஷூ பந்தில் அவுட் ஆனார். டிம் பிரெஸ்னன் 20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இன்னும் 9 பந்துகளை விளையாட வேண்டிய நிலையில் பந்தை எதிர்கொண்ட பிரெஸ்னன் ஒரு ரன் எடுத்து டிரெம்லெட்டை பேட் செய்யச் செய்தார். இது மோசமான முடிவாகும். பிரெஸ்னன் அந்த சிங்கிளை எடுத்திருக்கக் கூடாது.
அடுத்த பந்தே டிரெம்லெட்டை ரோச் வீழ்த்தினார். மேற்கிந்திய அணியில் ஆந்த்ரே ரசல் 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் பிஷூ 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ரோச் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
கிறிஸ் கெய்ல், டேரன் பிராவோ, கெய்ரன் போலார்ட் கோண பேட்டிங் வரிசையை இங்கிலாந்து எவ்வளவு திறமையாக சமாளிக்கிறது என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும்.
மேலும் படிக்க
வித்தியாசமானது ஸ்ட்ராஸ் தலைமை இங்கிலாந்து அணி!
ஈடன் கார்டன்ஸ்: ஐ.சி.சி. இன்று பார்வையிடுகிறது
ஓய்வா? கெவின் பீட்டர்சன் மறுப்பு
31 ஓவர்களில் இங்கிலாந்து 172/2
ஸ்ட்ராஸ் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி
இதையும் தேடு: உலகக் கோப்பை கிரிக்கெட், மேற்கிந்திய தீவுகள், இங்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக