22 மார்., 2011

தெண்டுல்கரின் நேர்மையும் பாண்டிங்கின் சுயநலமும் Chennai திங்கட்கிழமை, மார்ச் 21, 4:31 PM IST முந்தைய பதிவுகள் 4.09
இமெயில் பிரதி
உலக கோப்பை போட்டியில் விளையாடும் சீனியர் வீரர்கள் தெண்டுல்கர், பாண்டிங். ஆனால் இரண்டு பேருக்குள் ஆடு களத்தில் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. சென்னையில் நேற்று நடந்த போட்டியில் அவர் தனது நேர்மையை வெளிப்படுத்தினார்.

2 ரன்னில் இருந்தபோது ராம்பால் வீசியபந்து தெண்டுல்கரின் கிளவுசில் (கையுறை) பட்டு சென்றது. அதை வெஸ்ட்இண்டீஸ் விக்கெட் கீப்பர் பிடித்தார். வெஸ்ட்இண்டீஸ் வீரர் மகிழ்ச்சி அடைய நடுவர் டேவிஸ் அவுட் இல்லை என்று தலையால் மறுத்தார். ஆனால் தெண்டுல்கர் பந்து கையுறையில் பட்டு சென்றதை உணர்ந்தார். இதை தொடர்ந்து நடுவர் அவுட் கொடுக்காமலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவரது நேர்மை கிரிக்கெட் உலகத்தால் பாராட்டப்படுகிறது.

ஆனால் இதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் உள்ளார். நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் அவுட் இல்லை என்று கூறி மைதானத்தை விட்டு செல்ல மறுத்தார். மறுபரிசீலனை முறையில் அவரது அவுட் உறுதி செய்யப்பட்டது.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் டாரன்சமி கூறும்போது, தெண்டுல்கர் தான் உண்மையிலேயே ஜென்டில் மேன். அவராக மைதானத்தை விட்டு வெளியே சென்றது மிகுந்த பாராட்டுக்குரியது என்றார்.

கருத்துகள் இல்லை: