Lyss Young Star அணியினர் தாய்மண் உள்ளரங்கத்தை தமதாக்கினர்
கடந்த 06.03.2011 தாய்மண் (Zug) கழகத்தால் நடாத்தப்பட்ட 9வது உள்ளரங்க கிண்ணத்தை தமதாக்கினர். மொத்தமாக 16 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன. அரை இறுதிப்போட்டியில் Blue Star அணியினர் Sun Rise அணியினரை 4 - 2 என்ற ரீதியிலும் Young Star அணியினர் Young Star a அணியினரை 4 - 3 என்ற ரீதியிலும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர்.
இறுதிபோட்டியில் Young Star அணியினர் Blue Star அணியினரை 7 - 1 என்ற ரீதியில் தோற்கடித்து தாய்மண் கிண்ணத்தை தமதாக்கினர்.
தொடர்ச்சியாக 2010, 2011 ஆண்டுகளில் Lyss Young Star அணியினர் தாய்மண் கிண்ணத்தை தமதாக்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கழகமான Yvrdon Tamil Star சிறப்பாக ஆடி பலரின் பாராட்டையும் பெற்றது.
1) Young Star
2) Blue Star
3) Young Star A
4) Sun Rise
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக