28 பிப்., 2011


கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி
[ திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011, 10:44.58 மு.ப GMT ]
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 12 வது போட்டி ஜிம்பாப்வே – கனடா அணிகளுக்கிடையில் நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்பமே ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தது. முதலாவது பந்து வீச்சிலேயே பிரன்டன் டெய்லர் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சார்ல்ஸ் கவன்ரி 4 ஓட்டங்களோடு வெளியேறினார். இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட டெடன்டா டைபு மற்றும் கிரெய்க் ஹேர்வின் ஆகியோர் தமக்குள் 150 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
டைபு 2 ஓட்டங்களால் சத்தினை தவரவிட்டு 99 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஹேர்வின் 85 ஓட்டங்களோடு களத்தை விட்டு வெளியேறினார்.
பந்து வீச்சில் பாலாஜி ராவு 10 ஓவர்கள் பந்துவீசி 57 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
299 இலக்காக கொண்டு களமிறங்கிய கனடா அணி 42.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி
[ திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011, 10:44.58 மு.ப GMT ]
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 12 வது போட்டி ஜிம்பாப்வே – கனடா அணிகளுக்கிடையில் நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்பமே ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தது. முதலாவது பந்து வீச்சிலேயே பிரன்டன் டெய்லர் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சார்ல்ஸ் கவன்ரி 4 ஓட்டங்களோடு வெளியேறினார். இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட டெடன்டா டைபு மற்றும் கிரெய்க் ஹேர்வின் ஆகியோர் தமக்குள் 150 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
டைபு 2 ஓட்டங்களால் சத்தினை தவரவிட்டு 99 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஹேர்வின் 85 ஓட்டங்களோடு களத்தை விட்டு வெளியேறினார்.
பந்து வீச்சில் பாலாஜி ராவு 10 ஓவர்கள் பந்துவீசி 57 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
299 இலக்காக கொண்டு களமிறங்கிய கனடா அணி 42.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அதிரடி ஆட்டம் : 115 ரன்களுடன் சுருண்டது நெதர்லாந்து
[ திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011, 04:29.01 பி.ப GMT ]
கிரிஸ் கெய்ல், போலார்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 330 ரன்களைக் குவித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, வேகப்பந்து வீச்சாளர் கீமர் ரோச்சின் ஹாட்ரிக்கால் 215 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்த பி பிரிவு ஆட்டத்தில் பூவா தலையா வென்ற நெதர்லாந்து அணி, மேற்கிந்திய அணியை முதலில் களமிறக்கிறது.

கிரிஸ் கெய்லும், ஸ்மித்தும் முதல் விக்கெட்டிற்கு 16.3 ஒவர்களில் 100 ரன்களைக் குவித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஸ்மித் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், கெய்ல் 7 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களுடன் 80 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கெய்ல் மிக நிதானமாகவே ஆடி 110 பந்துகளில் 80 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு ஆடவந்த போலார்ட் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 5 பவுண்டரிகளுடனும், 4 சிக்சர்களுடனும் 60 ரன்களை அடித்துக் குவித்தார். மேற்கிந்திய அணி 50 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது.
மிகப்பெரிய வெற்றி இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி, கீமர் ரோச், பென் ஆகியோரின் வேகப்பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நெதர்லாந்து அணியின் கூப்பர் மட்டுமே நின்றாடி 55 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார். முதாசர் புகாரி 24 ரன்கள் எடுத்தார்.
கடைசி மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் ரோச் வீழ்த்த 115 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது.
8.3 ஓவர்களில் 27 ரன்களைக் கொடுத்த 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கீமர் ரோச் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

27 பிப்., 2011


பரபரப்பான பெங்களூரு போட்டி! இந்தியா(எ)இங்கிலாந்து ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது!

First Published : 27 Feb 2011 07:21:57 PM IST

Last Updated : 27 Feb 2011 10:48:27 PM IST
பெங்களூரு, பிப்.27: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்  தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் சேர்த்தது.

டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய சேவாக், சச்சின் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் சேவாக் முதல் இரண்டு ஓவர்களில் சிறிது தடுமாறினார். அவர் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டிய சேவாக் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் பிரஸ்னன் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த காம்பிரும் சச்சினும் நன்கு ஆடி ரன்கள் சேர்த்தனர். காம்பிர் 51 ரன்கள் எடுத்தார். சச்சின் 120 ரன்கள் எடுத்தார். இவர் உலகக் கோப்பையில் அடிக்கும் 4வது சதம். அவருடைய தனிப்பட்ட சாதனையில் ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 47வது சதம் இது.

பின்னர் யுவராஜ் சிங், தோனி இருவரும் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். தோனி 31 ரன்களும் யுவராஜ் 58 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய பின்வரிசை ஆட்டக்காரர்கள் சுமாராக ஆட இந்திய அணி மட மடவென்று விக்கெட்களை இழந்தது. கடைசி ஓவரில் அடுத்தடுத்து கடைசி இரு விக்கெட்கள் விழ இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய ஸ்ட்ராஸ் பீட்டர்சன் இருவரும் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அந்த அணியின் துவக்க வீரர் ஸ்ட்ராஸ் 158 ரன்கள் குவித்து வெற்றி நாயகனாக ஜொலித்தார். பீட்டர்சன் 31 ரன்கள் எடுத்தார். ட்ராட் 16 ரன்களும் பெல் 69 ரன்களும் குவித்தனர்.

போட்டி முழுவதும் இங்கிலாந்து பக்கமே சென்றுவிட்டது. 43வது ஓவரின் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தபோது அப்படித்தான் ரசிகர்கள் எண்ணினர். ஆனால் ஜாகீர் கான் வீசிய பந்தை அடித்தார் பெல். அதை அழகாகப் பிடித்து அவுட் ஆக்கினார் விராட் கோலி. அதன் பின் வந்தவர்கள் தங்கள் பங்குக்கு ரன் விகிதத்தை ஏற்றி ஆட்டமிழந்தனர்.

8 விக்கெட் இழந்த நிலையிலும் அந்த அணி வீரர்கள் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசித் தள்ளினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு சரியாக 338 ரன்களை எடுத்தது. இதன்மூலம் போட்டி டை ஆனது. யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்த போட்டியால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இறுதி ஓவர் வரை ரசிகர்களை சீட் நுனி வரை வரவைத்த மேட்ச் ஆக இருந்தது இந்தப் போட்டி.

26 பிப்., 2011


இலங்கையுடனான போட்டி: 11 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி

First Published : 26 Feb 2011 06:32:20 PM IST

Last Updated : 26 Feb 2011 10:57:51 PM IST
கொழும்பு: பிப்.26: உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 10வது ஆட்டம் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிதி முதலில் பேட்டிங் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அஹ்மத் ஷேஷாத், முகமத் ஹபீஸ் ஜோடி நிதானமாக ஆட்டத்தைத் துவக்கியது. ஷேஷாத் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹபீஸ் 32 ரன்னும், கம்ரான் அக்மல் 39 ரன்னும் எடுத்தனர். நடுவரிசையில் யூனுஸ் கானும் மிஸ்பா உல் ஹக்கும் நிலைத்து நின்று ஆடி 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். யூனுஸ் கான் 72 ரன்னும், மிஸ்பா ஆட்டமிழக்காமல் 83 ரன்னும் எடுத்தனர். 50 ஓவர்களின் இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து, 277 ரன்கள் எடுத்தது.

இலங்கை தரப்பில் பெரேரா, ஹெராத் தலா 2 விக்கெட்களையும், மேத்திவ்ஸ், முரளிதரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு துவக்கம் நன்றாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அந்த அணியின் தரங்கா-தில்ஷன் இணை முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது. தரங்கா 33 ரன்னும் தில்ஷன் 41 ரன்களும் சேர்த்தனர். அடுத்து ஜயவர்த்தனே 2 ரன்னிலும் சமரவீரா 1 ரன்னிலும் ஆட்டம் இழக்கவே அந்த அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. அணித்தலைவர் சங்ககராவும் சில்வாவும் மிக மெதுவாக ஆடி மேலும் விக்கெட்கள் விழாமல் பார்த்துக்கொண்டனர். சங்ககரா 49 ரன்னிலும் சில்வா 57 ரன்னிலும் ஆட்டம் இழக்க ஆட்டத்தின் போக்கு முழுவதும் பாகிஸ்தான் வசம் வந்தது. அந்த அணியின் மேத்திவ்ஸ் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ;இந்த பெருமை
 வைகோவை சேரும் :நாஞ்சில் சம்பத்


குமரி மாவட்ட மதிமுக இளை ஞரணி சார்பில் குமரி மாவட்ட மதிமுக புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பொதுக் கூட்டம் நாகர்கோவில் வடசேரியில்  நடைபெற்றது.

கூட்டத்தில் மதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அப்போது அவர்,   ‘’தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை, நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கத்தின் விலை கூட விண்ணை எட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.


2001ம் ஆண்டு 1 பவுன் 4,000 ஆக இருந்தது. ஆனால் இப்போது ஒரு பவுன் 18 ஆயிரமாகி இருக்கிறது. ஏழை குடும்பங்கள் பெரும் பரி தவிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இந்தியாவில் பெரிய பிரச்சனை தண்ணீர் தான். கண்ணீரால் இந்த நாடு உடையாது. ஆனால் தண்ணீரால் உடைய போகிறது.


விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆணையத்தின் முன் ஆஜராகி வைகோ வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் வரை வாதாடி வென்றவர் வைகோ. அடுத்த கட்டமாக கச்சத்தீவு பிரச்னை மீட்க வைகோ தயாராகி வருகிறார். 


விரைவில் இது தொடர் பான வழக்கில் வைகோ வாதாடி, தமிழக மீனவர்களுக்கு வெற்றியை வாங்கி தருவார். பாகிஸ்தானில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்கள் சிறையில் பல ஆண்டுகளாக வாடினர்.

அவர்களை மீட்டு கொண்டு வந்தது வைகோ. கடியப்பட்டணம், இணையம், கோடிமுனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 44 மீனவர்கள் கத்தார் சிறையில் வாடினர். இவர்களில் இன்னும் 17 பேர் சிறையில் தான் இருக்கிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணி வலுவாகி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இந்த பெருமை வைகோவை சேரும்’’ என்று தெரிவித்தார்.




Pakistan 277/7 (50 ov)
Sri Lanka 266/9 (50.0 ov)
Pakistan won by 11 runs
Pakistan innings (50 overs maximum)RB4s6sSR
View dismissalAhmed Shehzadc †Sangakkara b Perera13232056.52
View dismissalMohammad Hafeezrun out (Herath/Jayawardene/†Sangakkara/Muralitharan)323141103.22
View dismissalKamran Akmalst †Sangakkara b Herath39485081.25
View dismissalYounis Khanc Jayawardene b Herath72764094.73
Misbah-ul-Haqnot out83916091.20
View dismissalUmar Akmalc Dilshan b Muralitharan10151066.66
View dismissalShahid Afridi*c Dilshan b Mathews161230133.33
View dismissalAbdul Razzaqc sub (CK Kapugedera) b Perera340075.00
Extras(lb 4, w 5)9
Total(7 wickets; 50 overs)277(5.54 runs per over)
Did not bat Umar GulAbdur RehmanShoaib Akhtar
Fall of wickets1-28 (Ahmed Shehzad, 5.3 ov)2-76 (Mohammad Hafeez, 13.1 ov)3-105 (Kamran Akmal, 20.2 ov),4-213 (Younis Khan, 40.5 ov)5-238 (Umar Akmal, 45.3 ov)6-267 (Shahid Afridi, 48.5 ov)7-277 (Abdul Razzaq, 49.6 ov)
BowlingOMRWEcon
KMDN Kulasekara1016406.40(1w)
View wicketsNLTC Perera906226.88(2w)
View wicketAD Mathews1005615.60
View wicketM Muralitharan1003513.50(2w)
View wicketsHMRKB Herath1004624.60
TM Dilshan1010010.00
Sri Lanka innings (target: 278 runs from 50 overs)RB4s6sSR
View dismissalWU Tharangac Shahid Afridi b Mohammad Hafeez33436076.74
View dismissalTM Dilshanb Shahid Afridi41555074.54
View dismissalKC Sangakkara*†c Ahmed Shehzad b Shahid Afridi49612180.32
View dismissalDPMD Jayawardeneb Shoaib Akhtar2100020.00
View dismissalTT Samaraweerast †Kamran Akmal b Shahid Afridi140025.00
View dismissalLPC Silvast †Kamran Akmal b Abdur Rehman57785073.07
View dismissalAD Mathewsc Ahmed Shehzad b Shahid Afridi18202090.00
View dismissalNLTC Pererab Shoaib Akhtar8610133.33
View dismissalKMDN Kulasekarac Umar Akmal b Umar Gul241421171.42
HMRKB Herathnot out4100040.00
M Muralitharannot out01000.00
Extras(b 1, lb 10, w 16, nb 2)29
Total(9 wickets; 50 overs)266(5.32 runs per over)
Fall of wickets1-76 (Tharanga, 14.2 ov)2-88 (Dilshan, 17.3 ov)3-95 (Jayawardene, 20.2 ov),4-96 (Samaraweera, 21.2 ov)5-169 (Sangakkara, 37.4 ov)6-209 (Mathews, 43.4 ov)7-232 (Perera, 45.5 ov),8-233 (Silva, 46.0 ov)9-265 (Kulasekara, 49.5 ov)
BowlingOMRWEcon
View wicketsShoaib Akhtar1004224.20
Abdul Razzaq512304.60
View wicketUmar Gul906016.66(1nb, 2w)
View wicketMohammad Hafeez603315.50(2w)
View wicketsShahid Afridi1003443.40(1w)
View wicketAbdur Rehman1016316.30(1nb, 3w)