இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டு அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப் சவாய் மன்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனால் முதலில் களமிறங்கிய கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 17.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ஓட்டங்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக