10 ஏப்., 2013

அரசுக்கு சவால் விடுக்கிறது கூட்டமைப்பு
முடிந்தால் வடமாகாணசபை தேர்தலை நடத்துங்கள்
வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனாலோ தொடர்ந்து அரசாங்கம்  வட மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடமாகாணசபை  தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என்பதனாலேயே தொடர்சியாக அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனாலோ தொடர்ந்து அரசாங்கம்  வட மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கின்றது.

அத்துடன் இந்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆகியவற்றுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறியே வட மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்றது.

இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளாமல் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நடக்கப்போவதில்லை என வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் வட மாகாண சபை தேர்தல், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தல் ஆகியன உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த வாக்குறுதிகளுக்கு எதிராக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக நடக்காவிட்டால் எப்படி செப்டம்பரில் வட மாகண தேர்தல் நடத்த முடியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். இதனால் வட மாகாண தேர்தலை நடத்தாமல் தொடர்நது இழுத்தடிப்பு செய்யவே இந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: