வக்கீல் சங்க செயலாளர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை திரும்ப பெற போலீஸ் முடிவு!
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து மதுரையில் ம.தி.மு.க. பூமிநாதன் தலைமையில் 04,04,2013 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய மதுரை
வழக்கறிஞர் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டு மக்கள் விடுதலை அமைப்பு பொதுச்செயலாளர் மீ.தா.பாண்டியன் இவர்கள் இருவர் மீதும், தமிழக காவல் துறை இந்திய தண்டனைச்சட்டம் 153 பிரிவின் கீழ் தேச ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனை கண்டித்து 10.04.2013 புதன்கிழமை மதுரை மாவட்ட நீதிமன்றம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னை சாலையில் மறியல் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பப்ட்டது. நீதிமன்றத்துக்கு வழக்குக்காக வந்த போலீசார்களை அப்புறப்படுத்தினர்,
இதனை அறிந்த போலீஸ் இணை கமிஷ்னர் திருநாவுக்கரசு வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்தத்தை நடத்தினர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினார்,
இதனிடையே 10 நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக வழக்கறிஞர்கள் கூடி அறிவித்தனர். இதனையும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற காவல்துறை உயர்அதிகாரிகள், இந்த பிரச்சனையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். மேலும் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வக்கீல்கள் போலீசாரிடையேயான மோதல் போல் நடந்து விடக்கூடாது என்றும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையடுத்து வக்கீல் சங்க செயலாளர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை திரும்ப பெற போலீஸ் முடிவு எடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக