2 ஏப்., 2013


நைஜீரியாவில் இனக்கலவரம்: 4500 மக்கள் வெளியேற்றம்

நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின்றன. மத்திய நைஜீரியாவில் பிரச்சினைக்குரிய கதுனா
மாநிலம், கவுரா மாவட்டத்தில் முஸ்லிம்களின் புலானி பிரிவினரும், அடகார் கிறிஸ்தவ இனக் குழுவினரும் பழிக்குப்பழியாக தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கவுரா மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு, துப்பாக்கிகளுடன் வந்த ஒரு கும்பல், 3 சமுதாயத்தினர் மீது சரமாரியாக சுட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். 4500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புலானி பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விளைநிலங்களில் மேய்ந்த மாடுகளுக்கு விவசாயிகள் விஷம் வைத்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். 
2011 தேர்தலுக்குப் பிறகு தெற்கு கதுனாவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: