யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழு யாழில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு பின்னர் இந்திய அரசினால் யாழில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டனர்.
அந்த வகையில் யாழில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டு இந்திய வீட்டுத்திட்டம், மற்றும் குருநகரில் அமைந்துள்ள இந்திய- இலங்கை நட்புறவு வலைத் தொழிற்சாலை மற்றும் யாழ்.நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டதுடன்,அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.
இதேவேளை யாழ் நூல் நிலையத்தின் சிறுவர் பகுதிக்கு சென்ற இவர்கள் மிகவும் ஆச்சரியமாக அதனுடைய அமைப்பு செயற்பாடுகளை அவதானித்து அதனை பாராட்டிச் சென்றனர்.
இந்த குழுவில் நாடளுமன்ற உறுப்பினர்களான சௌகத்தா றோய், சந்தீப் தீக்த், அனுரா தக்கூர் தனஞ்சய சிங், கௌட் யஸ்கி மற்றும் பிரகா ஜவதேகர ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாகத்தின் சிறப்பு செயலாளர் பி.எஸ். இராகவன், இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாளரும் நிதி ஆலோசகருமமான பிமல் ஜுல்கா, யாழ் மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக