போலீஸ்காரர்களுக்கிடையே மோதல்! எஸ்.ஐ. மீது துப்பாக்கி சூடு! சென்னையில் பரபரப்பு!
சென்னை புதுப்பேட்டையில் இரண்டு போலீஸ்காரர்களுக்கிடையே வாய் தகராறு நடந்துள்ளது. இதில் வாய் தகராறு புதுப்பேட்டையில் இரண்டு போலீஸ்காரர்களுக்கிடையே
வாய் தகராறு நடந்துள்ளது. இதில் வாய் தகராறு முற்றி துப்பாக்கி சூடு நடந்துள்ளது. துப்பாக்கி சூட்டில், எஸ்.ஐ. இளமாறன் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து எஸ்.ஐ. இளமாறன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுபேட்டையில் சந்திரபானு தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலத்தில் இருந்து 200 மீட்டர் தூரமே உள்ள இந்த பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் சென்னை போலீஸ் உயர் அதிகாரகிள் அத்தனை பேரும் மொத்தமாக இங்கே முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் ஆயுத படை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இளமாறன். இவர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு இரவு எட்டு மணி அளவில் விடுதிக்கு திரும்பியிருக்கிறார். அதே விடுதியில் சென்னை ஆயுதப்படை காவலராக இருக்கும் ஆனந்தகுமாரும் தங்கியிருந்ததாக 2கூறப்படுகிறது.
இருவரும் இரவில் மதுபோதையில் இருந்தபோது வாய் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டதாகவும். அப்போது துப்பாக்கியால் தாக்கிக் கொண்டார்கள் என்றும், இதில் துப்பாக்கி சுட்டத்தில், இளமாறன் தொடையில் குண்டு பாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக