ஐ.சி.சி 20க்கு 20 தரவரிசை இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில்
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஒற்றை டுவென்டி 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுக்
கொண்டதையடுத்து இலங்கை அணி டுவெண்டி 20 சர்வதேசத் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறது.
இப்போட்டியில் தோல்வியடைந்திருந்தால் இலங்கை அணி இரண்டாமிடத்திற்குப் பின்தள்ளப்பட்டிருக்கும் என்ற போதிலும் 17 ஓட்ட வெற்றி இலங்கையின் முதலிடத்தைக் காப்பாற்றிக் கொண்டது.
இதன்படி இந்த தரப்படுத்தலில் இலங்கை அணி முதலிடத்தில் காணப்படுவதோடு, மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாமிடத்தில் காணப்படுகிறது.
இந்திய, பாகிஸ்தான் அணிகள் 119 புள்ளிகளோடு காணப்படுகின்ற போதிலும், தசம புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி 3வது இடத்திலும் பாகிஸ்தான் அணி 4வது இடத்திலும் காணப்படுகின்றன.
இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகள் தொடர்ந்து 5வது, 6வது, 7வது இடங்களில் காணப்படுகின்ற அதே வேளை, நியூசிலாந்து, பங்களாதேஷ், அயர்லாந்து, சிம்பாப்வே அணிகள் இறுதி 4 இடங்களைப் பெற்றுள்ளன.
இலங்கை 132
மேற்கிந்திய தீவுகள் 126
இந்தியா 119
பாகிஸ்தான் 119
இங்கிலாநது 118
தென் ஆபிரிக்கா 114
அவுஸ்திரேலியா 102
நியூசிலாந்து 98
பங்களாதேஷ் 82
அயர்லாந்து 82
சிம்பாப்வே 41
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக