மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது
ஐ.பி.எல். சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் 5-வது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.
பாண்டிங்கும், சச்சின் தெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். சச்சின் சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் போல்டாகி வெளியேறினார். பாண்டிங் 6 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 25 பந்தில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க பொல்லார்ட் 38 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் விஜய் 5 ரன்னிலும், ஹசி 20 ரன்களிலும் அவுட் ஆனார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பிராவோ 10, பத்ரிநாத் 16, ஜடேஜா 16 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் டோனி சிறப்பாக விளையாடினார். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை தூக்கி அடித்தார் டோனி. மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த பொல்லார்ட் அருமையாக கேட்ச் பிடித்து டோனியை அவுட் ஆக்கினார். அத்துடன் மும்பை அணியின் வெற்றி உறுதியானது. டோனி 26 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 51 ரன் அடித்தார்.
கடைசியில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக