10 ஏப்., 2013




சென்னையில் பெண் தேர்தல் அதிகாரி மாயம்! கடத்தலா என்று போலீசார் விசாரணை!
    கூட்டுறவு சங்க தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும்கட்சியிலேயே
பலகீனமாக உள்ள ஒரு பிரிவினரும் இந்த தேர்தலில் ஓரங்கட்டப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் புலம்பி திரிகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தலைநகர் சென்னையில் ராயபுரம் தொகுதியில் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிக்கு அருகே உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று (10.04.2013) பகல் நேரத்தில் தேர்தல் பணிகள் நடந்து வந்தது. இதில் ஆளும்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒரு அணியிலும், ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு அணிகளிலும் மல்லுக்கு நின்றனர்.
இதுபோதாதென்று கட்சியின் மூத்த தலைவரின் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கினர். இப்படிப்பட்ட வேலையில் தேர்தலை முன்னின்று நடத்துவதற்காக அரசால் நியமிக்கப்பட்டிருந்த பெண் தேர்தல் அதிகாரி பிரேமலதா திடீரென்று மாயமானார். இதனால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற பீதி அப்பகுதி முழுவதும் பரவியது. 
சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியின் செல்போன் சுட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதற்றமான ஒரு சூழ்நிலை அங்கு நிலவுகிறது. மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிற எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பிரேமலதா சம்பவத்தால் பயந்துபோன மற்ற அதிகாரிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: