10 ஏப்., 2013


மு. காவின் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்துக்காக இதுவரை அமைச்சுப்பதவியை தூக்கி வீசியதாக வரலாறு இல்லை- அப்துல் மஜீத்


ஒரு காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போது அன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்வதன் மூலமே முஸ்லிம்களின் தன்மானத்தை காக்க முடியும் என கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் இன்று தாம் ராஜினாமா செய்வதன் மூலம் நன்மை கிடைக்குமா என கேட்பது இவர்களின் சயநல சிந்தனையையே காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று முஸ்லிம் சமூகம் சிங்கள பேரினவாதத்தால் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் இருந்தே தீர்க்க முடியும் என முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் பழைய பல்லவியை பேசுவதன் மூலம் முஸ்லிம்களை வழமை போன்று ஏமாற்றுகிறார்கள்.

அத்துடன் அரசாங்கத்துடன் இருந்தால்தான் ஜனாதிபதியை சந்தித்து இது பற்றி பேச முடியும் எனவும் தமது கையாலாகா தனத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறாயின் அமைச்சர்களாக இருப்பதை விட ஜனாதிபதியின் இணைப்பாளர்களாக இருந்தால் அதுவும் தமது கட்சிகளை கலைத்து விட்டு ஜனாதிபதியின் கட்சியான சுதந்திரக்கட்சியுடன் இணைந்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கம் ஏற்படும் அல்லவா என்று மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என நினைத்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு செய்ய இவர்கள் முன்வருவார்களா?

உண்மையில் அமைச்சர்களாக அதாவது அரசாங்கத்தின் நக்குத்திண்ணிகளாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு சார்பாக எதையும் முதுகெலும்புடன் பேச முடியாது என்பதே யதார்த்தமாகும். அதிகமாக பேசினால் விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் என்பது ஜே ஆர் காலம் முதல் நமது அமைச்சர்களுக்கு இன்னமும் உறைக்காத சொல்லாகும் என்றார்.

கருத்துகள் இல்லை: