9 ஏப்., 2013


பாலச்சந்திரன் படுகொலையில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தொடர்பு அரசால் நிரூபணம்


சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கி, சர்வதேசரீதியாக போர்க்குற்றத்தை மையமாக வைத்து நகரும் வலையிலிருந்து தப்பும் முகமாக, சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மேஜ
ர் ஜெனரல் கமால் குணரட்ணவை மாட்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலரை படுகொலை செய்ததென்ற குற்றச்சாட்டில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை நோக்கி பொறிவைக்கப்பட்டுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
53ஆவது படையணியின் 8 விசேட படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ஆவர். தடுத்து வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்களின் படுகொலைக்கும், பாலகன் பாலச்சந்திரன் படுகொலைக்கும் 53 ஆவது படையணியே பொறுப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
kamal-gunaratnasrilanka2

கருத்துகள் இல்லை: