23 ஜூன், 2014


சமன் செய்த க்ளோஸ்
பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (15 கோல்கள்) அடித்தவர் வரிசையில் முதலிடத்தில் இருந்தார். ஜெர்மனியின் க்ளோஸ் 14 கோல்களுடன் 2ஆவது இடத்தில் இருந்தார்.
எனவே, இந்த உலகக் கோப்பை தொடங்கும் போதே ரொனால்டோவின் சாதனையை க்ளோஸ் சமன் செய்வார் அல்லது முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல, கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்து ரொனால்டோவின் சாதனையை சமன் செய்தார் க்ளோஸ். இன்னும் ஜெர்மனி அணிக்கு ஆட்டங்கள் இருப்பதால் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையை க்ளோஸ் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
மிரோஸ்லவ் க்ளோஸ் சரியான நேரத்தில் கோல் அடித்து கை கொடுக்க கானா அணிக்கு எதிரான ஆட்டத்தை 2_-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் கோல் அடித் ததன் மூலம் உலகக் கோப் பையில் அதிக கோல்கள் (15) அடித்த பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால் டோவின் சாதனையை க்ளோஸ் சமன் செய்தார்.
குரூப் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணி களுக்கு இடையிலான இந்த ஆட்டம் ஃபோர் டெல்ஸாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 2006 மற்றும் 2010-இல் இடம் பெற்றிருந்த அனுபவ வீரர் களைக் கொண்டிருக்கும் ஜெர்மனி அணி, போர்ச்சு கலைப் போல கானாவை யும் எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாக்குதல் ஆட் டத்தில் ஈடுபட்ட கானா அணியிடம் ஜெர்மனியின் முயற்சி பலிக்கவில்லை. இதனால் முதல்பாதியில் கோல் ஏதும் அடிக்கப்பட வில்லை.
இடைவேளைக்குப் பின் 51-ஆவது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து வந்த கிராஸ ஜெர்மனியின் மரியோ கோட்ஸ் கானா அணியின் இரண்டு டிஃ பண்டர்களுக்கு இடையே புகுந்து தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த 3 நிமிடங்களில் அதேபோல கானாவின் ஆண்ட்ரூ இயு ஒரு கோல் அடிக்க ஆட் டம் 1_-1 என சமநிலை ஆனது. இந்த இரு கோல் களுமே லாங் ரேஞ்ச் பாஸ் களின் மூலம் தலையால் முட்டி அடிக்கப்பட்டவை.
பின்னர் 63ஆ-வது நிமிடத்தில் ஜெர்மனியின் டிஃபண்டர்கள் செய்த தவறை சரியாகப் பயன் படுத்தி துல்லியமாக பாஸ் செய்தனர் கானா வீரர்கள். விளைவு, கானா வீரர் கியான் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.

ஒருவழியாக 71-ஆவது நிமிடத்தில் கார்னர் கிக்கை க்ளோஸ் கோல் அடித்து ஆட்டத்தை 2-_2 என சமநிலைப்படுத்தினார். பின் இரு அணியும் ஆக்ரோஷ மாக மோதியும் கூடுதலாக கோல் அடிக்க முடிய வில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

கருத்துகள் இல்லை: