13 ஜூன், 2014

ரொனால்டோவின் சாதனையை முறியடிப்பாரா ஜேர்மனியின் குளோச
ஜேர்மனியை சேர்ந்தபோலந்து நு பரம்பரை வீரரான  மிரோஸ்லாவ் குளோச பிரேசிலைச் சேர்ந்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைப்பார் என்று கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கிண்ண போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனைக்கு சொந்தகாரராக உள்ளார்.
அவர் 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடியுள்ள 19 ஆட்டங்களில், 15 கோல்கள் அடித்துள்ளார்.
அவரது இந்த அதிரடி சாதனையை ஜேர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோச  இந்த உலக கிண்ண போட்டியில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை விளையாடியுள்ள 2002, 2006, 2010 ஆகிய 3 உலக கோப்பையில் 14 கோல்கள் அடித்துள்ளார்.
இந்த உலக கிண்ண போட்டியில் விளையாடும் குளோச இன்னும் 2 கோல் அடித்தால் ரொனால்டோ சாதனையை முறியடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: