7 ஜூன், 2014


ஆரம்­ப­மா­க­வுள்ள உல­கக்­கிண்ண தொடரின் இறு­தி­யாட்­டத்தில் ஆர்­ஜன்­டீ­னாவை எதிர்கொள்­வோம் என பிரேஸில் அணியின் பயி ற்­சி­யாளர் லுஸி பிலிப் சோலாரி எதிர்வு கூறி­யுள்ளார்.
 
 
உலெ­கெங்கும் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள 'பிபா' வின் 20 ஆவது உல­கக்­கிண்ணத் தொடர் பிரே­ஸிலில் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 
 
32 அணிகள் ஜூலை 13 வரை மோதும் இத்­தொ­டரில் எந்த அணிகள் இறு­திப்­போட்­டியில் மோதும், கிண்­ண த்தை கைப்­பற்றும் அணி எது என்ற எதிர்­பார்ப்பும் ஆவலும் ரசி­கர்கள் மத்­தியில் தொற்­றிக்­கொண்­டுள்­ளன.
 
இந்­நி­லையில் இறு­திப்­போட்­டியில் பிரே ஸில்- ஆர்­ஜன்­டீனா அணி­களே மோத வாய்ப்­புக்கள் உள்­ளதாக பிரேஸில் அணியின் பயிற்­சி­யாளர் சோலாரி கணித்­துள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,
 
இம்­முறை தொடர் குறித்து நாங்கள் ஆய்வு செய்­ததில் தென்­ன­மெ­ரிக்க கண்­டத்தில் உள்ள இரு வலி­மை­யான அணி­களே இறு­திப்­போட்­டியில் மோதும் வாய்ப்பு உள்­ளது. அதில் ஒன்று பிரேஸில் மற்­றொரு அணி ஆர்­ஜன்­டீனா. ஏனெ னில் இரு அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர் என அவர் தெரிவித்ததார்.

கருத்துகள் இல்லை: