13 ஜூன், 2014

ஸ்பெயினுக்கு பதிலடி கொடுக்குமா நெதர்லாந்து? இன்று மோதல்
உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி குரோஷியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்நிலையில் தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய அணியான நெதர்லாந்தும் இன்று சந்திக்கின்றன.
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைக் காலிறுதிக்கு முன்னேறும்.
ஸ்பெயின் அணியில் கடந்த உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் கூடுதல் நேரத்தில் கோல் அடித்து ஸ்பெயினை உலக சாம்பியனாக்கிய இனியெஸ்டா, இந்த முறையும் அந்த அணியின் தூணாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அதே நேரத்தில் நெதர்லாந்து கடந்த உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினுடன் ஏற்பட்ட தோல்வியை இந்த தொடரின் முதல் போட்டியின் மூலம் சரிகட்ட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

கருத்துகள் இல்லை: