13 ஜூன், 2014

நெய்மரின் ஆசை பிரேசிலை வெல்ல வைப்பதே.
ரசிகர்கள் தங்களின் ஆதரவை பிரேசில் அணிக்கு கொடுத்தால் பிரேசிலை உலகக்கிண்ணத்தில் வீழ்த்துவது கடினமாகவே இருக்கும் என நெய்மர் கூறியுள்ளார்.
பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பெற்றது. இதில் பிரேசில் அணியின் இளம் நட்சத்திர வீரர் இரண்டு கோல்கள் அடித்து பிரேசில் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த நெய்மர், உலகக்கிண்ண கால்பந்து தொடரில் முழுவதும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தையும், ஆதரவையும் பிரேசில் அணிக்கு கொடுத்தால் நம் அணியை வீழ்த்துவது கடினம்.
மேலும் எனக்கு அதிக கோல் அடித்த வீரராக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. எனது விருப்பம் பிரேசில் அணி உலகசாம்பியன் ஆக வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: