13 ஜூன், 2014

மெஸ்ஸி

Messi Training.jpg
Personal information
முழு பெயர்லியோனல் ஆன்ட்ரே மெஸ்ஸி
Lionel Andrés Messi[1][2]
பிறந்த நாள்24 ஜூன் 1987 (அகவை 26)
பிறந்த இடம்ரோசாரியோ, ஆர்ஜென்டீனா
உயரம்1.69 மீ ()[1]
விளையாட்டு நிலைவிங்கர் / ஸ்ட்ரைகர்
Club information
தற்போதைய கிளப்பார்சிலோனா
எண்10
Youth career
1995–2000நியூவெல்ஸ் ஓல்ச் பாய்ஸ்
2000–2004பார்சிலோனா
Senior career*
YearsTeamApps(Gls)
2004–2005பார்சிலோனா பி5(0)
2004–பார்சிலோனா126(69)
National team
2005ஆர்ஜென்டீனா U207(6)
2008ஆர்ஜென்டீனா U235(2)
2005–ஆர்ஜென்டீனா41(13

லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி . ஜூன் 24, 1987 -இல் பிறந்தவர்) என்ற இவர் அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் ஆவர், இவர் தற்போது லா லிகா அணி, பார்சிலோனா
மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவற்றுக்காக விளையாடி வருகிறார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட
வீரர்களில் ஒருவராக மெஸ்ஸி கருதப்படுகிறார்,[3][4][5] 21 வயதிற்குள்ளாகவே பல விருதுகளுக்கான, பால்லோன் டி'ஆர் மற்றும் உலகிலேயே ஆண்டின் சிறந்த வீரருக்கான ஃபிஃபா (FIFA) விருது ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.[6][7][8] இவருடைய ஆட்ட முறை மற்றும் திறமையின் காரணமாக இவர், கால்பந்தாட்ட சாதனையாளரான டீகோ மாரடோனாவுடன் ஒப்பிடப்படுகிறார், மாரடோனாவும் இவரை தன்னுடைய "வாரிசு" என்றே அறிவித்துள்ளார்.[9][10]

மிக இளவயதிலேயே மெஸ்ஸி கால்பந்து விளையாடத் தொடங்கினார், இவருடைய திறமையை விரைவிலேயே பார்சிலோனா கண்டு கொண்டது. ரோசாரியோவைச் சார்ந்த நியுவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் இளைஞர் அணியை விட்டு 2000 ஆம் ஆண்டில் வெளியேறி, அவரது குடும்பத்துடன் ஐரோப்பாவில் குடியேறினார். ஏனெனில் பார்சிலோனா இவருடைய வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க உறுதி கூறியது. 2004–05 சீசனில் முதன்முதலாக விளையாடத் தொடங்கினார், அவர் லா லிகா அணிக்கு ஒரு லீக் போட்டியில் விளையாடிய மிக இளவயது நபர் என்ற சாதனையை செய்தார், மேலும் லீக் போட்டியில் கோல் அடித்த இளவயது நபர் என்ற பெருமையையும் பெற்றார். மெஸ்ஸி முதன்முதலாக கலந்து கொண்ட சீசனில், லா லிகாவை பார்சிலோனா வெற்றி பெற்றது, அந்த லீகின் இரட்டை வெற்றியாளராகவும், 2006 ஆம் ஆண்டில் UEFA சாம்பியன்ஸ் லீகின் வெற்றியாளராகவும் விளங்கியது. இவர் முதன்முதலில் சாதித்த சீசன் 2006–07 ஆகும்: எல் கிளாஸிகோவில் ஹாட்ரிக் கோல் அடித்த, முதல் ரெகுலர் வீரராகவும் மொத்தம் 26 லீக் போட்டிகளில் 14 கோல்களை அடித்தவராகவும் விளங்கினார். ஆனாலும், இவருக்கு மிகவும் வெற்றிகரமாக விளங்கியது 2008-09 சீசன் ஆகும், இதில் மெஸ்ஸி மொத்தம் 38 கோல்களை அடித்தார், இது அந்த போட்டிகளில் பெரிய அளவில் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஆறு கோல்களை அடித்து மெஸ்ஸி முதலிடத்தில் இருந்தார், இதில் 2005 ஃபிஃபா இளைஞர் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் அடித்த இரண்டு கோல்களும் அடங்கும். இதன் பின்னர் சிறிது காலத்திலேயே, அவர் அர்ஜென்டினாவின் சீனியர் அணியில் மிக முக்கியமான ஒரு உறுப்பினராக மாறினார். 2006 -ஆம் ஆண்டில், அவர் ஃபிஃபா உலகக்கோப்பையில் விளையாடியதன் மூலமாக, அந்த போட்டியில் கலந்து கொண்ட மிக இளவயது அர்ஜென்டின வீரர் என்ற பெருமையைப் பெற்றார், அடுத்த ஆண்டில் கோப்பா அமெரிக்கா டோர்னமன்டில் ரன்னர்ஸ் அப் மெடலைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், பீஜிங்கில், அவருடைய முதல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார், அர்ஜென்டினா ஒலிம்பிக் கால்பந்து அணியுடன் இணைந்து ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.

பொருளடக்கம்
ஆரம்பகால வாழ்க்கை
ஜூன் 24, 1987 -இல் அர்ஜென்டினாவில், ரோசாரியோ என்ற இடத்தில், தொழிற்சாலை பணியாளர் ஜோர்கெ மெஸ்ஸி என்பவருக்கும், பகுதி நேரமாக சுத்திகரிப்பு பணியைச் செய்து வந்த சீலியா (கன்னிப்பெயர் கக்கிடினி) என்பவருக்கும் மகனாக பிறந்தார்.[11][12] இவருடைய தந்தைவழி குடும்பமானது, இத்தாலியில் உள்ள அன்கோனா என்ற இடத்தைப் பூர்வீகமாக கொண்டது, இவருடைய முன்னோரான மெஸ்ஸி என்பவர் 1883 -ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்கு குடியேறினார்.[13][14] இவருக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர், அவர்களின் பெயர்களாவன, ரோடிரிகோ மற்றும் மாத்தியாஸ் என்பவராவார் மற்றும் மரியா சோல் என்ற சகோதரியும் உண்டு.[15] ஐந்து வயதாகும்போதே, கிராண்டோலி என்ற உள்ளூர் கிளப்பில் தன்னுடைய தந்தையின் பயிற்சியில் கால்பந்து விளையாடத் தொடங்கினார்.[16] 1995 -ஆம் ஆண்டில், இவருடைய சொந்த ஊரான ரோசாரியாவைச் சார்ந்த நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ் என்ற அணிக்கு மாறினார்.[16] இவருக்கு 11 வயதாகும்போது, இவருக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது.[17] மெஸ்ஸியின் வளர்ச்சியில் பிரிமேரா டிவிஷன் கிளப் ரிவர் ப்ளேட் மிகவும் அக்கறைக் கொண்டிருந்தாலும், இந்த சிகிச்சைக்கு பணம் செலுத்த போதுமான பணம் அவர்களிடம் இல்லை, ஏனெனில் அது ஒரு மாதத்துக்கு $900 செலவாகக் கூடியதாக இருந்தது.[12] பார்சிலோனாவின் விளையாட்டுப்பிரிவு டைரக்டர் கார்லஸ் ரெக்ஸாக் என்பவர், கடலோனியாவில் லேலெய்டா என்ற இடத்தில் இருந்த மெஸ்ஸியின் உறவினர்கள் மூலமாக மெஸ்ஸியின் திறன்களை அறிந்திருந்தார். இதன் காரணமாக, பின்னர் மெஸ்ஸியின் தந்தை எளிதாக ஒரு சோதனை சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்.[12] இவர் விளையாடியதைப் பார்த்த பார்சிலோனா இவருடன் ஒப்பந்தம் போட்டது,[18] மேலும், அவர் ஸ்பெயினுக்கு வரத் தயாராக இருந்தால் மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியது.[16] பின்னர் இவருடைய குடும்பத்தினர் ஐரோப்பாவுக்கு சென்றனர், மெஸ்ஸி அந்த கிளப்பின் இளைஞர் அணிகளில் விளையாடத் தொடங்கினார்.[18]

கிளப் கேரியர்
பார்சிலோனா
மெஸ்ஸி அவருடைய முதல் அணிக்காக, அதிகாரப்பூர்வமற்ற நட்புரீதியான போட்டி ஒன்றில் நவம்பர் 16, 2003 -இல் போர்ட்டோ அணிக்கு எதிராக களமிறங்கினார் (அப்போது அவருக்கு வயது 16 ஆண்டுகள் மற்றும் 145 நாட்கள்) ஆகும்.[19][20] ஒரு ஆண்டுக்கு முன்பாகவே, ஃப்ராங்க் ரிஜ்கார்டு என்பவர் இவரை, அக்டோபர் 16, 2004 -இல் எஸ்பேன்யோல் அணிக்கு எதிராக லீக் போட்டியில் களமிறக்கினார் (அப்போது அவருக்கு வயது 17 ஆண்டுகள் மற்றும் 114 நாட்கள் ஆகும்), இதன் மூலமாக பார்சிலோனாவுக்காக விளையாடிய மூன்றாவது மிக இளவயது வீரர் ஆவார் மற்றும் லா லிகா கிளப்பிற்காக விளையாடிய மிக இளவயது வீரரும் இவராவார் (இந்த சாதனையை இவருடைய சக அணி வீரர் போஜான் கிர்கிக் செப்டம்பர் 2007 -இல் முறியடித்தார்).[1][19] இந்த கிளப்பிற்காக அல்பாசிட்டே அணிக்கு எதிராக மே 1, 2005 -இல் மெஸ்ஸி முதன்முதலாக இவருடைய சீனியர் கோலை அடித்தார், அப்போது அவருக்கு வயது 17 ஆண்டுகளும், 10 மாதங்களும் 7 நாட்களுமாகும், பார்சிலோனாவுக்காக கோல் அடித்த மிக இளவயது வீரராக இதனால் இவர் மாறினார்[21] 2007 -ஆம் ஆண்டில் இந்த சாதனையை போஜான் கிர்கிக் முறியடித்தார், இவர் மெஸ்ஸியின் உதவியுடன் கோல் அடித்தார்.[22] மெஸ்ஸியின் முன்னாள் பயிற்சியாளரான ஃப்ராங்க் ரிஜ்கார்ட் என்பவரைப் பற்றி: "ரிஜ்கார்டுதான் என்னைத் தொடங்கி வைத்தார் என்பதை நான் என்றும் மறக்கமாட்டேன்" என்று கூறுகிறார். ஏனெனில், அவர் எனக்கு 16 அல்லது 17 வயதே ஆனபோது, அவர் எனக்கு போதுமான நம்பிக்கையை ஊட்டினார்." [23]

2005–06 சீசன்[தொகு]
"Messi I think is like me, he is the best in the world along with Ronaldinho."
—Diego Maradona.[24]
செப்டம்பர் 16 -இல், மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக, பார்சிலோனா மெஸ்ஸியின் ஒப்பந்தத்தைப் புதுப்பித்தது – இந்த முறை, 2014 ஜூன் மாதம் வரை ஒப்பந்தத்தை நீட்டித்து, முதன் முதலாக ஒப்பந்தம் போட்டது.[16] செப்டம்பர் 26 -இல் மெஸ்ஸி முதன்முதலாக ஸ்பானிஷ் குடியுரிமையைப் பெற்றார்[25] கடைசியாக அந்த சீசனில் ஸ்பானிஷ் ஃபர்ஸ்ட் டிவிஷனில் களமிறங்க முடிந்தது. செப்டம்பர் 27 -இல் UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இத்தாலியைச் சேர்ந்த உடினேஸ் என்ற கிளப்பிற்கு எதிராக விளையாடியதே மெஸ்ஸி விளையாடிய முதல் உள்ளூர் போட்டியாகும்.[19] கேம்ப் நவ் என்ற பார்சிலோனா ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள், அவருடைய சப்ஸ்டிட்யூஷன் செய்யப்பட்டபோது மெஸ்ஸியை எழுந்து நின்று பாராட்டினார்கள், பந்தை பதட்டமில்லாமல் தக்கவைத்துக் கொள்ளும் திறனும், ரொனால்டினோவுக்கு வெற்றிகரமாக பந்தைக் கடத்தியது ஆகியவற்றின் காரணமாக பார்சிலோனா அதிக பலனைப் பெற்றது.[26]

பதினேழு லீக் போட்டிகளில் விளையாடி, மெஸ்ஸி மொத்தமாக ஆறு கோல்களை அடித்தார், மற்றும் ஆறு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஒரு கோல் அடித்தார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் இரண்டாவது சுற்றில், செல்சியா அணிக்கு எதிரான போட்டியின்போது, இவருடைய வலது தொடையில் சதை கிழிந்து காயமுற்றதால், இவருடைய சீசன் மார்ச் 7, 2006 -இல் முன்கூட்டியே முடிவுற்றது.[27] ஃப்ராங்க் ரிஜ்கார்டின் பார்சிலோனா அந்த சீசனின் இறுதியில் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவின் சாம்பியனாக வெளிவந்தது.[28][29]

2006–07 சீசன்[தொகு]


2007 -ஆம் ஆண்டில் ரேஞ்சர்ஸுக்கு எதிரான ஒரு போட்டியில் மெஸ்ஸி
2006–07 சீசனில், மெஸ்ஸி தன்னைத்தானே ஒரு முறையான முதல்தர அணியின் விளையாட்டு வீரராக மாற்றிக் கொண்டார், இந்த சீசனில் மொத்தம் 26 போட்டிகளில் 14 முறைகள் கோல்கள் அடித்தார்.[30] நவம்பர் 12 -இல் ரியல் ஜரகோஸாவுக்கு எதிரான போட்டியில், மெஸ்ஸியின் கால் எலும்பு உடைந்தது, இதனால் அவர் மூன்று மாதங்களுக்கு விளையாட முடியாத நிலையில் இருந்தார்.[31][32] பிப்ரவரி 11 இல் மெஸ்ஸி அவருடைய காயத்திலிருந்து அர்ஜென்டினாவில் மீண்டு வந்தார், காயத்திலிருந்து மீண்டவுடன் முதன்முதலாக ரேசிங் சான்டண்டர் அணிக்கு எதிராக விளையாடினார்,[33] இந்த போட்டியில் இரண்டாவது பாதியில் ஒரு சப்ஸ்டிட்யூட்டாக கலந்து கொண்டார். மார்ச் 11 -இல், வெறும் 10 நபர்களுடன் விளையாடிய பார்சிலோனா அணியானது, மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல்களால், 3–3 என்ற கோல் கணக்கில் தி கிளாசிக் போட்டியில் டிரா செய்தது, இதில் கோல்கள் மூன்றுமுறைகள் சமனிலைப்படுத்தப்பட்டது, கடைசி சமனிலையானது கூடுதல் காலத்தில் எட்டப்பட்டது.[34] இதை செய்ததன் மூலமாக, இவான் ஜாமோரானொ (ரியல் மாட்ரிட்டுக்காக 1994–95 சீசனில் அடித்தார்) என்பவருக்கு பின்னர், தி கிளாசிக் போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் நபராக மாறினார்.[35] இந்த போட்டிகளில் (திட்டமிடப்பட்ட போட்டிகள்) கோல் அடித்த மிக இளவயது வீரரும் மெஸ்ஸி ஆவார். இந்த சீசனின் இறுதிப்பகுதியில், அடிக்கடி கோல்கள் அடிக்க ஆரம்பித்தார்; லீக் போட்டிகளில் இவர் அடித்த 14 கோல்களில், 11 கோல்கள் கடைசி 13 போட்டிகளில் மட்டுமே அடித்தார்.[36]



கெட்டாஃபேவுக்கு எதிராக கோல் அடிப்பதற்கு சில விநாடிகளுக்கு முன்பு மெஸ்ஸி
"புதிய மாராடோனா" என்ற பட்டப்பெயர் என்பது தனக்கு பொருத்தமானதுதான் என்பதையும் மெஸ்ஸி நிரூபித்தார், மாராடோனாவின் பிரபலமான கோல்களைக் கிட்டத்தட்ட ஒரே சீசனில், மாராடோனா மீண்டும் நிகழ்த்திக்காட்டினார்.[37] ஏப்ரல் 18, 2007 -இல், கோப்பா டெல் ரே அரையிறுதி போட்டியில், கெட்டாஃபெவுக்கு எதிராக மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்தார், இதில் ஒன்று, 1986 FIFA உலகக்கோப்பையில் மெக்சிகோவில் மாராடோனா இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த மிகவும் பிரபலமான கோலைப் போலவே இருந்தது, இந்த கோலைத்தான் இந்த நூற்றாண்டின் கோல் என்று அழைக்கின்றனர்.[38] உலகின் முக்கிய விளையாட்டு பத்திரிக்கைகள், மாராடோனாவையும் மெஸ்ஸியையும் ஒப்பிட்டு எழுதத் தொடங்கின, ஒரு ஸ்பானிய பத்திரிக்கை மெஸ்ஸியை "மெஸ்ஸிடோனா" என்று பட்டப்பெயர் அளித்து அழைத்தது.[39] மாராடோனாவைப் போன்றே, அதே தூரத்திற்கு மெஸ்ஸியும் ஓடினார், 62 மீட்டர்s (203 அடி), அதே எண்ணிக்கையிலான வீரர்களைத் தாண்டினார் (ஆறுபேர், அதில் கோல்கீப்பரும் அடக்கம்), மேலும் அதே போன்ற இடத்திலிருந்து கோல் அடித்தார், பின்னர், 21 ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவில் ஓடிய மாராடோனாவைப் போன்றே, மூலை கொடியை நோக்கி மெஸ்ஸியும் ஓடினார்.[37] போட்டிக்கு பின்பு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மெஸ்ஸியின் சக வீரரான டெக்கோ என்பவர் கூறியது: "என் வாழ்க்கையில் நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த கோல் இதுவாகும்."[40] உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் மாராடானோ இங்கிலாந்துக்கு எதிராக அடித்த கோலைப் போன்றே அமைந்த ஒரு கோலையும் எஸ்பேன்யால் அணிக்கு எதிராக மெஸ்ஸி அடித்தார். மெஸ்ஸி பந்துக்கு அருகே நின்று அதை அடித்துவிட்டு, பந்து கோல்கீப்பர் கார்லோஸ் காமெனி என்பவரைத் தாண்டி செல்வதற்காக பந்தை கையால் சிறிது தட்டி விட்டார்.[41] எஸ்பேன்யால் வீரர்களின் தொடர்ந்த முறையீடுகளுக்கு பின்னரும், தொலைக்காட்சி ரீப்ளேக்கள் அது ஹேண்ட்பால்தான் என்று தெளிவாக காட்டிய பின்னரும், அந்த கோல் கணக்கிலெடுக்கப்பட்டது.[41]

2007–08 சீசன்[தொகு]


செப்டம்பர் 22, 2007 -இல் கேம்ப் நவு என்ற இடத்தில் சிவில்லாவுக்கு எதிராக, பார்க்கா அணியினரை 2-0 என்று முன்னணிக்கு கொண்டு வரும்போது மெஸ்ஸி
2007–08 சீசனின்போது, ஒரு வாரத்திலேயே ஐந்து கோல்களை அடித்தார், இதனால் பார்சிலோனா அணியை லா லிகா போட்டிகளில், முதல் நான்கு அணிகளுக்குள் கொண்டு சேர்த்தார். செப்டம்பர் 19 -இல் பார்சிலோனா, சாம்பியன்ஸ் லீக் போட்டியில், ஒலிம்பிக் லியோன்னய்ஸ் அணியை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போட்டியில், ஒரு கோலை மெஸ்ஸி அடித்தார்.[42] செப்டம்பர் 22 -இல் அவர் செவில்லா அணிக்கு எதிராக, இரண்டு கோல்களை அடித்தார்[43] பின்னர் செப்டம்பர் 26 -இல் ரியல் ஜாராகோஸா என்ற அணியை 4–1 என்ற கோல் கணக்கில் வென்ற போட்டியில் மெஸ்ஸி மேலும் இரண்டு கோல்களை அடித்தார்.[44] பிப்ரவரி 27 -இல் பார்க்கா அணிக்காக வேலன்சியாவை எதிர்த்து விளையாடியபோது மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக 100வது போட்டியை விளையாடி முடித்தார்.[45]

FIFப்ரோ வோர்ல்ட் XI பிளேயர் என்ற விருதுக்கு முன்கள வீரருக்கான பிரிவில் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.[46] மார்க்கா என்ற ஸ்பானிஷ் செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில், 77 சதவீதம் ஓட்டைப் பெற்று, இவர் சிறந்த வீரராக தேர்வு பெற்றார்.[47] எல் முண்டோ டிபோர்டிவோ மற்றும் ஸ்போர்ட் ஆகிய பார்சிலோனா இதழ்களின் பத்தி எழுத்தாளர்கள் பலூன் டி'ஓர் விருதானது, வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார், இந்த கருத்தை, பிரான்ஸ் பெக்கென்பவுர் என்பவரும் ஆதரித்தார்.[48] ஃப்ரான்செஸ்கோ டோட்டி போன்ற கால்பந்தாட்ட பிரபலங்களும், உலகில் தற்போதுள்ள வீரர்களில், தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக மெஸ்ஸி கருதப்பட வேண்டும் என்று அறிவித்தனர்.[49]

மார்ச் 4 -இல், சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில், செல்டிக் என்ற அணிக்கு எதிரான போட்டியில், இவருடைய இடது தொடையில் தசைகிழிந்து காயம் ஏற்பட்டதால் மெஸ்ஸி ஆறுவாரங்களுக்கு விளையாடாமல் இருந்தார். மூன்று சீசன்களில், இந்த வகையான காயத்தை நான்காவது முறையாக பெற்றார்.[50]

2008–09 சீசன்[தொகு]


டெபோர்டிவோ அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மெஸ்ஸி
இந்த கிளப்பிலிருந்து, ரொனால்டினோவின் விலகலை அடுத்து, 10 எண் உள்ள ஜெர்சியை மெஸ்ஸி பெற்றார்.[51] அக்டோபர் 1, 2008 -இல், ஷாக்தர் டோனட்ஸ்க் அணிக்கு எதிரான, சாம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில், கடைசி ஏழு நிமிடங்களில் மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்தார், இதில் தியர்ரி ஹென்றி என்பவருக்கு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கினார், இதன் மூலமாக 1–0 என்றிருந்த ஸ்கோரை 1–2 வெற்றியாக பார்சிலோனாவுக்காக மாற்றினார்.[52] இதற்கு அடுத்த லீக் போட்டி, அட்லெடிகோ மாட்ரிட்டுக்கு எதிராக நடந்தது, இந்த போட்டியானது மெஸ்ஸி மற்றும் அவருடைய நல்ல நண்பரான செர்ஜியோ அகுரோ கிய இருவருக்கும் நடந்த நட்புரீதியான போர் என்று கூறப்பட்டது.[53] ஃப்ரீ கிக்கின் மூலமாக மெஸ்ஸி ஒரு கோலை அடித்தார், பார்க்கா அணி, அந்த போட்டியை 6–1 என்ற கோல் கணக்கில் வென்றது.[54] சிவில்லா அணிக்கு எதிராக மற்றொரு மிகச்சிறந்த பிரேஸ் ஒன்றை 23 மீட்டர்s (25 yd) இடமிருந்து பெற்ற வாலியை கோல் கீப்பரை ட்ரிபிளிங் மூலமாக கடந்து சென்று, மற்றொரு புறத்திலிருந்து குறுகிய ஆங்கிளில் அடித்தார்.[55] டிசம்பர் 13, 2008 -இல் முதல் கிளாசிகோ சீசனில், ரியல் மாட்ரிட்டுக்கு எதிராக பார்சிலோனாவின் 2–0 வெற்றியில் இரண்டாவது கோலை அடித்தார்.[56] 2008 FIFA வோர்ல்ட் பிளேயர் ஆஃப் தி இயர் விருதுகளில் 678 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.[7]

2009 ஆம் ஆண்டின் முதல் ஹாட்ரிக்கை, அட்லெட்டிகோ மாட்ரிட்டுக்கு எதிரான கோப்பா டெல் ரே போட்டியில் அடித்தார், இதில் பார்சிலோனா 3–1 என்ற கோல் கணக்கில் வென்றது.[57] பிப்ரவரி 1, 2009 -இல் ரேசிங் சான்டான்டருக்கு எதிரான போட்டியில், 1-0 என்ற நிலையில் இருந்தபோது, இரண்டாவது பாதியில் பார்சிலோனாவுக்கு சப்ஸ்டிட்யூட்டாக களமிறங்கிய மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்து 1–2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற உதவினார். இந்த இரண்டு கோல்களில், இரண்டாவது கோலானது, பார்சிலோனா அணியின் 5000-ஆவது லீக் கோல் ஆகும். லா லிகாவின் 28வது சுற்றில், அந்த சீசனின் எல்லா போட்டிகளையும் சேர்த்து, தன்னுடைய 30வது கோலை மெஸ்ஸி அடித்தார், அதனால் அவருடைய அணி 6–0 என்ற கோல் கணக்கில் மாளகா சிஎஃப் அணியை வென்றது.[58] ஏப்ரல் 8, 2009 -இல், சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில், பேய்ரன் முனிச்சுக்கு எதிரான போட்டியில் இரண்டு முறை கோலடித்தார், இதனால் அந்த போட்டிகளில் மொத்தம் ஒன்பது கோல்களை அடித்து தனிப்பட்ட சாதனையைச் செய்தார்.[59] ஏப்ரல் 18 -இல், அந்த சீசனின் 20வது கோலை அடித்தார், இதன் மூலம் கெட்டாஃபெவுக்கு எதிராக 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது, இதன் காரணமாக ரியல் மாட்ரிட்டை விட ஆறு புள்ளிகள் அதிகமாக பெற்று போட்டி அட்டவணையில் பார்சிலோனா முதலிடத்தில் இருந்தது.[60]



2009 UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில், லியோனல் மெஸ்ஸி பந்தை உதைக்கும்போது, மைக்கெல் காரிக் (பின்னணியில்) பார்க்கிறார்
பார்சிலோனாவின் சீசன் முடிவடையும் தருவாயில் இருந்தபோது, ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில், மெஸ்ஸி இரண்டு கோல்களை (அவருடைய 35வது மற்றும் 36வது கோல்கள்) அடித்து 6–2 வெற்றியை ஈட்ட காரணமாக இருந்தார், இந்த போட்டி சாண்டியாகோ பெர்னாபூ[61] வில் நடந்தது, இந்த இடம் 1930 முதல் ரியல் அணியின் மிக வலுவான இடமாக இருந்து வந்தது.[62] ஒவ்வொரு கோலை அடித்த பின்னரும், அவர் ரசிகர்களிடமும், கேமராக்களிடமும் ஓடிச் சென்று, பார்சிலோனா ஜெர்சியை தூக்கி அதற்கு கீழ் அணிந்திருந்த மற்றொரு டீ-ஷர்ட்டைக் காண்பித்தார், அதில் சிண்ட்ரோம் எக்ஸ் ஃப்ராகில் என்ற எழுத்துக்கள் இருந்தன, இது காட்டலான் மொழியில் ஃப்ராகைல் எக்ஸ் சிண்ட்ரோம் என்ற குறைப்பாட்டின் பெயராகும். இதன் மூலமாக இந்த குறைபாட்டின் மூலமாக அவதியுறும் சிறார்களுக்கு தன்னுடைய ஆதரவைக் கூறினார்.[63] ஆண்ட்ரெஸ் இனைஸ்டாவில் கூடுதல் நேரத்தில் செல்சியாவுக்கு எதிரான போட்டியில் கோல் அடிப்பதற்கு மெஸ்ஸி உதவினார், இந்த போட்டி சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டியாகும். இந்த வெற்றியின் காரணமாக இறுதி போட்டியில் பார்சிலோனா மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. மே 13 -இல் முதன்முதலாக இவர் கோப்பா டெல் ரேவை வென்றார், இது அத்லெடிக் பில்பவு என்ற அணிக்கு எதிராக, 4–1 என்ற கோல் கணக்கில் பெற்ற வெற்றியில், ஒரு கோல் அடித்தது, மற்றும் இரண்டு கோல்களுக்கு உதவியது ஆகிய காரணங்களுக்காக வழங்கப்பட்டது.[64] லா லிகாவை வென்றதன் மூலம் அவரது அணி டபுளை வெல்ல உதவினார். மே 27 -இல், 2009 UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் 70வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்காக இரண்டாவது கோலை அடித்து, இரண்டு கோல்கள் முன்னிலை வகிக்க காரணமக இருந்தார்; சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஒன்பது கோல்களை அடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[65] UEFA கிளப்பின் ஆண்டின் சிறந்த முன்கள வீரர் விருதையும் மெஸ்ஸி பெற்றார், மேலும் UEFA கிளப்பின் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதையும் பெற்று, அந்த ஆண்டை முழுமையாக ஐரோப்பாவில் நிறைவு செய்தார்.[66] இந்த வெற்றியின் மூலமாக, பார்சிலோனா அணியானது, கோப்பா டெல் ரே, லா லிகா மற்றும் UEFA சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை ஒரே சீசனில் வென்றது,[67] ஒரு ஸ்பானிய கிளப் இவ்வாறு மூன்றையும் வென்றது இதுவே முதல்முறையாகும்.[68]

2009–10 சீசன்[தொகு]


பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிவற்றுக்கு இடையே கேம்ப் நவு ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற ஜோவன் கேம்பர் ட்ரோப்பியில் விளையாடும் பார்சிலோனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி
2009 UEFA சூப்பர் கப்பை வென்ற பின்னர், பார்சிலோனா அணியின் மேலாளர் ஜோசப் குவாடியோலா, மெஸ்ஸிதான் நான் இதுவரை பார்த்ததிலேயே மிகச் சிறந்த வீரர் என்று குறிப்பிட்டார்.[69]

செப்டம்பர் 18, மெஸ்ஸி பார்சிலோனாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டார் அது 2016 ஆம் ஆண்டு வரை நீடிக்கக் கூடியது அதில் இவருக்கான தொகையாக €250 மில்லியன் யூரோ சேர்க்கப்பட்டது, இதன் மூலமாக, ஸ்லேட்டன் இப்ராஹிமோவிக் என்பவருடன் இணைந்து, லா லிகாவில் மிக அதிக சம்பளம் பெறுவோராக மாறினார், அதாவது ஆண்டுக்கு €9.5 மில்லியன் வருவாய் ஈட்டினார்.[70][71] இதற்கு நான்கு நாட்களுக்கு பின்னர், செப்டம்பர் 22 -இல் லா லிகா போட்டியில், மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்து பார்க்கா 4–1 என்ற கோல் கணக்கில், ரேசிங் சான்டன்டரை வெல்ல காரணமாக இருந்தார்.[72] செப்டம்பர் 29 -இல் அந்த சீசனில் முதன்முதலாக ஐரோப்பிய கோலை டைனாமோ கிய்வ் அணிக்கு எதிராக அடித்தார், அதில் 2–0 வெற்றி கிட்டியது.[73] கேம்ப் நவுவில், ரியல் ஜராகோசா அணிக்கு எதிராக 6–1 என்ற கணக்கில் பெற்ற வெற்றியில் ஒரு கோல் அடித்ததன் மூலமாக லா லிகாவில் ஏழு போட்டிகளில் ஆறு கோல்களை மெஸ்ஸி அடித்திருந்தார்[74][75] நவம்பர் 7 இல் கேம்ப் நவுவில், மல்லோர்கா அணிக்கு எதிரான போட்டியில் 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போட்டியில், பெனால்டியில் ஒரு கோலை மெஸ்ஸி அடித்தார்.[76] டிசம்பர் 1, 2009 -இல் 2009 பால்லோன் டி'ஓர் -இன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், இவருக்கு அடுத்து வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவை 473 க்கு 233 என்ற பெரிய வித்தியாசத்தில் வென்றார்.[77][78][79] இதன் பின்னர், பிரான்ஸ் கால்பந்தாட்ட இதழில் மெஸ்ஸி: "அதனை எனது குடும்பத்தினருக்கு நான் சமர்ப்பிக்கிறேன். எனக்கு தேவைப்பட்ட போதெல்லாம் அவர்கள் என்னுடன் இருந்தார்கள், மேலும் சில நேரங்களில் என்னை விடவும் அதிகமாகவே உணர்வுப்பூர்வமாக இருந்தார்கள்." என்று கூறினார்[80] டிசம்பர் 19 -இல் 2009 FIFA கிளப் உலகக்கோப்பை இறுதி போட்டியில், எஸ்டுயடியண்ட்ஸ்க்கு எதிராக அபுதாபியில் நடந்த போட்டியில் வெற்றி கோலை மெஸ்ஸி அடித்தார்.[81] இரண்டு நாட்களுக்கு பின்னர், FIFA உலகில் சிறந்த விளையாட்டு வீரர் விருதைப் பெற்றார்; இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸாவி, காக்கா மற்றும் ஆண்ட்ரெஸ் இனிஸ்டா ஆகியோரை வென்று விருதைப் பெற்றார். இந்த விருதை இவர் முதல்முறையாக பெற்றார் மற்றும் இந்த கௌரவத்தைப் பெறும் முதல் அர்ஜென்டின வீரரும் இவரே.[82] ஜனவரி 10, 2010 -இல் 2010 ஆம் ஆண்டின் முதல் ஹாட்ரிக்கை மெஸ்ஸி அடித்தார். இதனை CD டெனெரிஃபி அணிக்கு எதிராக அடித்தார், இதில் 0–5 கோல் கணக்கில் வெற்றி கிடைத்தது.[83] ஜனவரி 17 -இல், தனது கிளப்பிற்காக தன்னுடைய 100வது கோலை அடித்தார், இதன் மூலம் அணியானது 4–0 என்ற கோல் கணக்கில் சிவில்லா அணியை வென்றது.[84]

சர்வதேச விளையாட்டு வாழ்க்கை[தொகு]
ஜூன் 2004 -இல், அர்ஜென்டினா அணிக்காக முதன்முதலில் களமிறங்கினார், அதில் பராகுவேவுக்கு எதிராக 20 வயதுக்குட்பட்டோர் நட்புரீதியான போட்டியில் விளையாடினார்.[85] 2005 -இல் அவர், நெதர்லாந்தில் 2005 FIFA உலக இளைஞர் சாம்பியன்ஷிப் வென்ற அணியில் இருந்தார். அதில் அவர், தங்கப் பந்து மற்றும் தங்க காலணி ஆகிய விருதுகளைப் பெற்றார்.[86]

18 வயது ஆனபோது, ஆகஸ்ட் 17, 2005 -இல் ஹங்கேரி அணிக்கு எதிராக முழுமையாக சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். 63வது நிமிடத்தின்போது அவர் மாற்று வீரராக களமிறங்கினார், ஆனால் 65வது நிமிடத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார், ஏனெனில் போட்டியின் ரெஃப்ரீ, மார்கஸ் மெர்க், தடுப்பு ஆட்டக்காரராக இருந்த, வில்மோஸ் வான்க்சாக் என்பவர் தன்னுடைய சட்டையை இழுத்தபோது, மெஸ்ஸி அவரை முழங்கையால் இடித்தார் என்று அறிவித்தார். இந்த முடிவு, முறையற்றது என்று கூறப்பட்டது, மாராடோனாவும் இந்த முடிவு முழுமையற்றது என்று கூறினார்.[87][88] செப்டம்பர் 3 -இல் அர்ஜென்டினா உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஒன்றில் பராகுவேவிடம் 1–0 என்றா கோல் கணக்கில் தோற்ற போட்டியில் இவர் மீண்டும் களமிறங்கினார். இந்த போட்டிக்கு முன்னதாக அவர், "இது மீண்டும் எனக்கு முதல் போட்டியே. முதலாவது போட்டி மிகவும் சிறிய கால அளவே இருந்தது." என்று கூறினார்[89] பின்னர், அர்ஜென்டினாவுக்காக பெருவை எதிர்த்து களமிறங்கினார்; அந்த போட்டிக்கு பின்பு, பெக்கர்மேன் என்பவர் மெஸ்ஸியை "ஒரு நகை" என்று குறிப்பிட்டார்.[90]

மார்ச் 28, 2009 -இல் வெனிசுலாவுக்கு எதிரான ஒரு உலகக் கோப்பை காலிறுதி போட்டியில், முதல்முறையாக 10 என்ற எண் கொண்ட அர்ஜென்டின ஜெர்சியை மெஸ்ஸி அணிந்தார். இந்த போட்டியிலேயே முதல் முதலாக டீகோ மாரடோனா அர்ஜென்டின அணியின் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக பங்கேற்றார். முதல் கோலை லியோனல் மெஸ்ஸி அடித்தார், போட்டியை 4–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றது.[91]

2006 FIFA உலகக் கோப்பை[தொகு]
2005–06 சீசனின் இறுதிகாலத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக, மெஸ்ஸி இரண்டு மாதங்கள் விளையாடாமல் இருந்தார், இதனால் இவர் உலகக் கோப்பையில் பங்கேற்பதும் கூட சந்தேகமானது. ஆனாலும், மே 15, 2006 -இல் நடைப்பெற்ற போட்டியில் டோர்ணமென்டுக்கு அவர் மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பை முன்பாக, அர்ஜென்டினா U-20 அணிக்கு எதிராக 15 நிமிடங்களும், அங்கோலாவுக்கு எதிராக 64வது நிமிடத்திலிருந்தும் விளையாடினார்.[92][93] சப்ஸ்டிட்யூட் பெஞ்சில் அமர்ந்து, உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஐவரி கோஸ்ட்டை எதிர்த்து, அர்ஜென்டினா வெற்றிப்பெற்றதை அவர் பார்த்தார்.[94] செர்பியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில், அர்ஜென்டினாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடிய மிக இளவயது வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார், அந்த போட்டியில் மாக்ஸி ரோடிகூஸ் என்பவருக்கு பதிலாக 74வது நிமிடத்தில் களமிறங்கியதன் மூலமாக இந்த சாதனையைப் படைத்தார். களமிறங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஹெர்னான் க்ரெஸ்போவுக்கு கோல் அடிக்க உதவினார், மேலும் 6–0 என்ற வெற்றியில் கடைசி கோலையும் இவர் அடித்தார், இதனால் அந்த போட்டிகளில் மிக இளவயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார், மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த ஆறாவது மிக இளவயது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[95] அர்ஜென்டினா 0–0 என்ற கணக்கில், நெதர்லாந்துடன் டை செய்த போட்டியிலும் மெஸ்ஸி கலந்து கொண்டார்.[96] மெக்ஸிகோவுக்கு எதிரான அடுத்த போட்டியில், ஸ்கோர் 1–1 என்று டை ஆகியிருந்த நிலையில் 84வது நிமிடத்தில் மெஸ்ஸி களமிறங்கினார். அவர் ஒரு கோலை அடித்தபோது, அது ஆஃப்சைடு[97][98] என்று விலக்கப்பட்டது, இதனால் தொடர்வதற்கு கூடுதல் ஆட்டநேரத்தில் ஒரு கோல் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜெர்மனிக்கு எதிரான கால் இறுதி போட்டியில், பயிற்சியாளர் ஜோஸ் பெகர்மேன் மெஸ்ஸியை பெஞ்சில் அமர்ந்திருக்குமாறு செய்தார், இதில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட்அவுட் முறையில் 4–2 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது.[99]

2007 கோப்பா அமெரிக்கா[தொகு]


கோப்பா அமெரிக்கா 2007 -இல் மெஸ்ஸி
கோப்பா அமெரிக்கா 2007 போட்டியில் ஜூன் 29, 2007 -இல் மெஸ்ஸி முதல் போட்டியில் விளையாடினார், அதில் முதல் போட்டியில் அர்ஜென்டினா அமெரிக்காவை 4–1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த போட்டியில், இவருடைய ப்ளேமேக்கர் திறன்களைக் காண்பித்தார். சக ஸ்ட்ரைக்கரான ஹெர்னன் க்ரெஸ்போ என்பவருக்கான பல ஷாட்களை இவர் ஏற்படுத்திக் கொடுத்தார். மெஸ்ஸிக்கான மாற்று ஆட்டக்காரராக 79வது நிமிடத்தில் களமிறங்கிய, டேவேஸ் ஒரு சில நிமிடங்களிலேயே கோல் அடித்தார்.[100]

இவருடைய இரண்டாவது போட்டி கொலம்பியாவுக்கு எதிராக நடந்தது, இதில் இவர் ஒரு பெனால்டியைப் பெற்றார், அதனை க்ரெஸ்போ கோலாக மாற்றினார் 1–1 என்ற கோல் கணக்கில் டையாக அந்த போட்டி முடிந்தது. அர்ஜென்டினாவின் இரண்டாவது கோலிலும் இவர் பங்கு வகித்தார், பின்னர் போட்டி வட்டத்திற்கு வெளியே பந்தை அடித்து ஃபவுல் செய்தார், இதன் மூலமாக ஜூவன் ரோமன் ரிக்யூல்மெ என்பவர் ஃப்ரீகிக்கில் ஒரு கோல் அடித்தார், மேலும் அர்ஜென்டினா 3–1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்த போட்டியின் இறுதி ஸ்கோர் 4–2 ஆக, அர்ஜென்டினா வெற்றிப் பெற்றது, இதனால் போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டின அணிக்கான இடத்தை உறுதி செய்தது.[101]

பாராகுவேவுக்கு எதிராக மூன்றாவது போட்டியில், மெஸ்ஸிக்கு ஓய்வு தரப்பட்டது, ஏனெனில் அவர்கள் முன்பே காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று விட்டனர். ஸ்கோர் 0–0 என்றிருக்கும்போது, எஸ்டெபான் கேம்பியாஸ்ஸோவுக்கு மாற்றாக 64வது நிமிடத்தில் அவர் போட்டியில் களமிறங்கினார். 79வது நிமிடத்தில், சேவியர் மாஸ்கெரானோவுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை மெஸ்ஸி ஏற்படுத்திக் கொடுத்தார்.[102] காலிறுதி போட்டியில், அர்ஜென்டினா பெருவை எதிர்கொண்டது, அந்த போட்டியில் ரிக்யூலெமெ கடத்திய பந்தைக் கொண்டு, மெஸ்ஸி இரண்டாவது கோலை அடித்தார், இதில் 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி கிடைத்தது.[103] மெக்சிகோவுக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஆஸ்வால்டோ ஸான்செஸ் இடமிருந்து பெற்ற லாப் பந்தை கோல் அடித்து 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழையக் காரணமாக இருந்தார்.[104] இறுதிப் போட்டியில் 3–0 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் அர்ஜென்டினா தோற்றுப்போனது.[105]



2008 ஒலிம்பிக்ஸில், பிரேசிலுக்கு எதிரான ஒரு போட்டியில் மெஸ்ஸி
2008 கோடை ஒலிம்பிக்ஸ்[தொகு]
2008 ஒலிம்பிக்ஸில், அர்ஜென்டினாவுக்காக விளையாடுவதிலிருந்து மெஸ்ஸி தடை செய்யப்பட்டார்,[106] ஜோசப் குவார்டியோலாவுடன் பேச்சு நடத்திய பின்னர் பார்சிலோனா அவர் விளையாட அனுமதி அளித்தது.[107] ஐவரி கோஸ்டிற்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணியில் சேர்ந்து, 2–1 என்ற வெற்றியில் முதல் கோலை அவர் அடித்தார்.[107] பின்னர் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், முதல் கோலை அடித்ததுடன், ஏஞ்சல் டி மாரியா என்பவர் இரண்டாம் கோலை அடிக்க உதவினார், இதனால் இவருடைய அணி கூடுதல் நேரத்தில் இரண்டாம் கோலை அடித்து 2–1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.[108] விளையாட்டு எதிரியான பிரேசிலுக்கு எதிரான போட்டியிலும் இவர் கலந்து கொண்டார், அதில் அர்ஜென்டினா 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது, இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.[109] தங்கப்பதக்கப் போட்டியில், மெஸ்ஸி மீண்டும் டி மாரியாவுக்கு உதவினார், இதன் மூலம் போட்டியின் ஒரே கோலை அடிக்க உதவினார், போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக 1–0 என்ற கணக்கில் வெற்றி கிடைத்தது.[110]

சொந்த வாழ்க்கை[தொகு]
ஒரு காலக்கட்டத்தில் மெஸ்ஸி, தன் சொந்த ஊரான ரோசாரியோவைச் சேர்ந்த மாகாரனா லெமோஸ் என்பவருடன் காதல் கொண்டிருந்தார். 2006 உலகக் கோப்பைக்கு சில வாரங்களுக்கு முன்பாக காயத்திலிருந்து குணமடைய ரோசாரியாவுக்கு திரும்பிய போது, அந்த பெண்ணின் தந்தையால், அப்பெண் அறிமுகம் செய்யப்பட்டார் என்று அவர் கூறுகிறார்.[111][112] கடந்த காலத்தில் பிரபல அர்ஜென்டின மாடலான, லூசியானா சலாசர் என்பவருடன் சில காலம் இணைந்திருந்தார்.[113][114] ஜனவரி 2009 -இல் அவர் "ஹாட் ட்ரிக் பார்க்கா" என்ற கேனல் 33 நிகழ்ச்சியில்: "எனக்கு ஒரு பெண் தோழி இருக்கிறாள், அவள் அர்ஜென்டினாவில் இருக்கிறாள், நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்" என்று கூறினார்.[114] பார்சிலோனா-எஸ்பேன்யோல் டெர்பிக்கு பின்பு சிட்கெஸ்ஸில் நடந்த ஒரு கார்னிவலில், அவரை ஆன்டோனெல்லா ரோக்குஸ்ஸு[115] என்ற ஒரு பெண்ணுடன் பார்த்தார்கள். ரோக்குஸ்ஸுவும் ரோசாரியாவைச் சேர்ந்தவரே.[116] அவர்கள் 2010 -ஆம் ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.[115]

ப்ரோ எவல்யூஷன் சாக்கர் 2009 என்ற வீடியோ கேமின் அட்டையில் அவர் தோன்றியுள்ளார் மேலும், அந்த கேமின் விளம்பரங்களிலும் ஈடுபட்டுள்ளார்.[117][118] மெஸ்ஸியும் பெர்னாண்டோ டார்ரஸ் என்பவரும் இணைந்து,[119] ப்ரோ எவல்யூஷன் சாக்கர் 2010 என்பதன் முகமாக இருக்கின்றனர், மேலும் இவர் மோஷன் கேப்ச்சரிங் மற்றும் ட்ரெயில்லர் ஆகியவற்றிலும் தோன்றியுள்ளார்.[120][121][122] அடிடாஸ் என்ற ஜெர்மன் விளையாட்டுப் பொருள்கள் நிறுவனம் மெஸ்ஸிக்கு ஸ்பான்சர் செய்கிறது, அவர்களின் தொலைக்காட்சி விளம்பரங்களில் மெஸ்ஸி தோன்றியுள்ளார்.[123]

இவருடைய இரு உறவினர்கள் கால்பந்தாட்ட விளையாட்டில் உள்ளனர்; அவர்கள் மாக்ஸி மற்றும் எம்மானுவேல் பியான்குச்சி ஆகியோர் ஆவர்.[124][125]

கிளப் புள்ளிவிவரங்கள்[தொகு]
சனவரி 30, 2010 -இன்படி[126]

கிளப் ஆண்டு லீக் கோப்பை[nb 1] ஐரோப்பா[nb 2] கிளப் உலகக் கோப்பை மொத்தம்
ஆடியவை கோல்கள் உதவிகள் ஆடியவை கோல்கள் உதவிகள் ஆடியவை கோல்கள் உதவிகள் ஆடியவை கோல்கள் உதவிகள் ஆடியவை கோல்கள் உதவிகள்
பார்சிலோனா 2004-05: 7 1 0 1 0 0 1 0 0 - - - 9 1 0
2005-06 17 6 3 2 1 0 6 1 1 - - - 25 8 4
2006–07 26 14 2 4 2 1 6 1 0 0 0 0 36 17 3
2007–08 28 10 12 3 0 0 9 6 1 - - - 40 16 13
2008–09 31 23 11 8 6 2 12 9 5 - - - 51 38 18
2009–10 17 15 7 4 3 0 6 2 1 2 2 0 29 22 8
கேரியரில் இதுவரையிலான மொத்தம் 126 69 35 22 12 3 40 19 8 2 2 0 190 102 46
சர்வதேச கோல்கள்[தொகு]
# தேதி இடம் எதிரணி ஸ்கோர் முடிவு போட்டி
1 மார்ச் 1, 2006. பேசில், சுவிட்சர்லாந்து குரோவாசியா 2 - 3 தோல்வி நட்பு ரீதியான போட்டி
2 ஜூன் 16, 2006 ஜெல்சென்கிர்சென், ஜெர்மனி செர்பியா மொண்டெனேகுரோ 6 – 0 வெற்றி 2004 உலகக் கோப்பை
3 ஜூன் 5, 2007 பார்சிலோனா, ஸ்பெயின் அல்ஜீரியா 4 - 3 வெற்றி நட்பு ரீதியான போட்டி
4 ஜூன் 5, 2007. பார்சிலோனா, ஸ்பெயின் அல்ஜீரியா 4 - 3 வெற்றி நட்பு ரீதியான போட்டி
5 ஜூலை 8, 2007 பர்குயிஸ்மெட்டோ, வெனிசுலா பெரு 4 - 0 வெற்றி 2007 கோப்பா அமெரிக்கா
6 ஜூலை 11, 2007 புயர்ட்டோ ஆர்டாஸ், வெனிசுலா மெக்சிக்கோ 0 - 3 வெற்றி 2007 கோப்பா அமெரிக்கா
7 அக்டோபர் 16, 2007 மரகைபோ, வெனிசிலா வெனிசுவேலா 0 - 2 வெற்றி 2010 உலகக் கோப்பை தகுதிச்சுற்று
8 நவம்பர் 20, 2007 பொகொடா, கொலம்பியா கொலம்பியா 2 – 1 தோல்வி 2010 உலகக் கோப்பை தகுதிச்சுற்று
9 ஜூன் 4, 2008 சான் டியாகோ, அமெரிக்கா மெக்சிகோ 1 - 4 வெற்றி நட்பு ரீதியான போட்டி
10 அக்டோபர் 11, 2008 ப்யூனஸ் ஏர்ஸ், அர்ஜென்டினா உருகுவை 2 – 1 வெற்றி 2010 உலகக் கோப்பை தகுதிச்சுற்று
11 பிப்ரவரி 11, 2008 மார்செயில்லே, பிரான்ஸ் பிரான்ஸ் 0 - 2 வெற்றி நட்பு ரீதியான போட்டி
12 மார்ச் 28, 2009 புயேனஸ் ஏர்ஸ், அர்ஜென்டினா
வெனிசுலா

4 - 0 வெற்றி 2010 உலகக் கோப்பை தகுதிச்சுற்று
13 நவம்பர் 14, 2009 மாட்ரிட், ஸ்பெயின் எசுப்பானியா 1 – 2 தோல்வி நட்பு ரீதியான போட்டி
கௌரவங்கள்[தொகு]
பார்சிலோனா[தொகு]
ஸ்பானிஷ் லீக் (3): 2004–05, 2005–06, 2008–09
ஸ்பானிஷ் கப்: (1) 2008–09
ஸ்பானிஷ் சூப்பர்கப் (3): 2005, 2006, 2009
UEFA சாம்பியன்ஸ் லீக் (2): 2005–06, 2008–09
UEFA சூப்பர் கப் (1): 2009
ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை (1): 2009
சர்வதேசப் போட்டிகள்[தொகு]
FIFA U-20 உலகக் கோப்பை: 2005
ஒலிம்பிக் தங்கப் பதக்கம்: 2008
தனிப்பட்ட சாதனைகள்[தொகு]
FIFA U-20 உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: 2005
FIFA U-20 உலகக்கோப்பை தொடர் நாயகன்: 2005
கோப்பா அமெரிக்கா டோர்னமென்டின் சிறந்த இளம் வீரர்: 2007
ஆண்டின் சிறந்த U-21 ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்: 2007
அர்ஜென்டினாவின் சிறந்த விளையாட்டு வீரர்: 2005, 2007, 2009
FIFPro ஆண்டின் சிறந்த இளம் வீரர்: 2006–2007, 2007–2008
FIFPro உலகிலேயே ஆண்டின் சிறந்த இளம் வீரர்: 2005–2006, 2006–2007, 2007–2008
உலக கால்பந்தாட்ட இளம் வீரர்: 2005–2006, 2006–2007, 2007–2008
ப்ரெமியோ டான் பாலோன் (லா லிகாவில் சிறந்த வெளிநாட்டு வீரர்): 2006–2007, 2008–2009
EFE ட்ரோப்பி (லா லிகாவில் சிறந்த ஐபெரோ அமெரிக்க வீரர்): 2006–2007, 2008–2009
FIFPro வோர்ல்ட் XI: 2006–2007, 2007–2008, 2008–2009
UEFA ஆண்டின் சிறந்த அணி: 2007–2008, 2008–2009
FIFA ஆண்டின் சிறந்த அணி: 2008, 2009
UEFA சாம்பியன்ஸ் லீக் அதிக கோல்கள்: 2008–2009
ட்ரோஃபியோ ஆல்ஃபிரடோ டி ஸ்டெஃபனோ: 2008–2009
UEFA கிளப் ஆண்டின் சிறந்த முன்கள வீரர்: 2008–2009
UEFA கிளப் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்: 2008–2009
LFP சிறந்த வீரர்: 2008–2009
LFP சிறந்த ஸ்ட்ரைக்கர்: 2008–2009
ஓன்ஸ் டி'ஓர்: 2009
பாலன் டி'ஓர் 2009
உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்: 2009
FIFA கிளப் உலகக் கோப்பை தங்க பந்து: 2009
டொயட்டோ விருது: 2009
FIFA ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர்: 2009
FIFPro ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர்: 2008-09

கருத்துகள் இல்லை: