13 ஜூன், 2014

நெய்மார்


Neymargoldenball.jpg
2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளில்மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு வீரராக தங்கப்பந்து விருது வழங்கப்பட்டபோது பிரேசிலின் நெய்மார்
சுய விவரம்
முழுப்பெயர்நெய்மார் டா சில்வா சான்டோசு இளையவர்[1]
பிறந்த தேதி5 பெப்ரவரி 1992 (அகவை 22)[1]
பிறந்த இடம்மோகி தாசு குருசெசு, பிரேசில்[1]
உயரம்1.75 மீ ()[2]
ஆடும் நிலைமுன்னணி வீரர் (பார்வர்டு), நடுக்கள வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்பார்சிலோனா
எண்11
இளநிலை வாழ்வழி
1999–2003போர்த்துகேச சான்டிசுட்டா
2003–2009சான்டோசு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிApps(Gls)
2009–2013சான்டோசு103(54)
2013–பார்சிலோனா26(9)
தேசிய அணி
2009பிரேசில் U173(1)
2011பிரேசில் U207(9)
2012பிரேசில் U237(4)
2010–பிரேசில்49(31

நெய்மார் டா சில்வா சான்டோசு ஜூனியர் (Neymar da Silva Santos Júnior, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [nejˈmaʁ dɐ ˈsiwvɐ ˈsɐ̃tus ˈʒũɲoʁ]; பிறப்பு:பெப்ரவரி 5, 1992), பொதுவாக நெய்மார், பிரேசிலைச் சார்ந்த காற்பந்து விளையாட்டாளர் ஆவார். இவர் பிரேசிலியத் தேசியக் காற்பந்து அணியில் முன்னணி
வீரராகவும் நடுக்கள வீரராகவும் விளையாடுகிறார். எசுப்பானிய நாட்டின் லா லீகா போட்டிகளில் பார்சிலோனா காற்பந்துக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

தென்னமெரிக்காவில் ஆண்டின் சிறந்த காற்பந்தாட்ட வீரர் என்ற வரிசையில் 2010இல் மூன்றாவதாக இடம் பிடித்த நெய்மார் 2011இல் தமது 19வது அகவையிலேயே முதலிடத்தைப் பிடித்தார்.[3] மூண்டும் 2012இலும் இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2011ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா பாலோன் தி'ஓர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நெய்மார் பத்தாவது இடத்தில் வந்தார். அந்த ஆண்டின் சிறந்த கோலுக்கு வழங்கப்படும் ஃபிஃபா புசுகாசு விருதினைப் பெற்றார்.[4] மிக விரைவான ஆட்டத்திற்கும் வேகமெடுக்கும் திறனுக்கும் காற்பந்தை கையாளும் (காலாளும்) விதத்திற்கும் இரண்டு கால்களையும் பயன்படுத்தக்கூடிய திறமைக்காகவும் எடுத்துச் சென்ற பந்தை முடிக்கும் திறமைக்காகவும் அறியப்படுகிறார். இவரது இரசிகர்கள் இவரது திறமையை பிரேசிலின் புகழ்பெற்ற காற்பந்தாளர் பெலேயுடன் ஒப்பிடுகின்றனர். இவரை "ஒரு சிறந்த விளையாட்டாளர்" என பெலேவும் "உலகின் மிகச்சிறந்த வீராராக வருவார்" என ரொனால்டினோவும் கூறியுள்ளனர்.


நெய்மார் 2003இல் சான்டோசு காற்பந்துக் கழகத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய நெய்மார் 2009இல் முதல்நிலை அணிக்காக அறிமுகமானார். அந்த ஆண்டிலேயே மிகச் சிறந்த இளைய விளையாட்டாளர் என்ற விருதினை வென்றார். 2010இல் சான்டோசு அணி கூட்டிணைவுப் போட்டிகளில் வெற்றிபெற மிக கூடுதலான கோல்களை (11) அடித்த நெய்மாருக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதும் கிடைத்தது. 2010 பருவத்தில் 60 ஆட்டங்களில் 42 கோல்கள் அடித்தார்.இவரது முயற்சியால் இவரது கழகம் காற்பந்தில் இரட்டை கோப்பைகளை வெல்ல காரணமாயிற்று. 2011இலும் இவரது சிறந்த ஆட்டத்தினால் சான்டோசு அணி இரட்டை (கால்பந்து)#கண்டத்து இரட்டை பெற்றது. 2011ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா கழக உலகக்கோப்பையில் வெங்கலபந்து வென்றார். இந்தப் போட்டிகளில் இறுதியாட்டம் வரை முன்னேறிய இவரது சான்டோசு கழகம் இறுதியாட்டத்தில் பார்சிலோனாவிடம் தோற்றது.[8][9]

பிரேசிலியத் தேசிய அணித் தேர்வு
நெய்மார் பிரேசிலின் 17 அகவைக்குக் கீழான அணி, 20 அகவைக்கு கீழானவர்களின் U-20 அணிகளில் ஆடியுள்ளார். மூத்தவர்களின் அணியில் 2010இல் தமது முதல் அறிமுக ஆட்டத்தைத் துவங்கினார். ஐக்கிய அமெரிக்காவுடனான நடபுப் போட்டியொன்றில் கலந்து கொண்ட நெய்மார் 28வது நிமிடத்தில் தலையினால் முட்டி கோலடித்தார்; இது பிரேசில் 2-0 என்ற கணக்கில் வெல்லத் துணை புரிந்தது. 2011இல் இசுக்காட்லாந்துடன் எமிரேட்சு விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து தமது அணி 2-0 என்ற கணக்கில் வெல்லத் துணை புரிந்தார்.

2013ஆம் ஆண்டுக்கான பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளில் பிரேசில் தேசிய அணியில் விளையாட 10 எண் சட்டை தரப்பட்டது. சூன் 30 அன்று பிரேசிலின் இரண்டாவது கோலை அடித்து இறுதியாட்டத்தில் எசுப்பானியாவை வெல்லத் துணை நின்றார். இவரது ஆட்டத்திறனால் இவருக்கு இந்தப் போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக தங்கபந்து விருது வழங்கப்பட்டது.[10] 48 ஆட்டங்களில் 31 கோல்கள் இட்டுள்ள இவர் தமது தேசிய அணிக்கு பிரேசில் தேசிய காற்பந்து அணி#பதினோராவது மிகவுயர்ந்த எண்ணிக்கை கோல் அடித்தவராக விளங்குகிறார்.[11]

பார்சிலோனா காற்பந்துக் கழகம்
2013இல் எசுப்பானிய காற்பந்துக் கழகம் பார்சிலோனா கால்பந்துக் கழகம் 57 மில்லியன் ஐரோக்களுக்கு வாங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: