மலேசிய பார்முலா-1 கார்பந்தயத்தில் ரெட் புல் ரேசிங் ரெனால்ட் அணியின் செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்.
மலேசியாவில் இந்த ஆண்டிற்கான "பார்முலா-1' கார்பந்தயத்தின் இரண்டாவது சுற்று போட்டி நேற்று நடந்தது. இதில் "மின்னல் வேகத்தில்' சீறிப்பாய்ந்த "ரெட் புல் ரேசிங் ரெனால்ட்' அணியின் செபாஸ்டியன் வெட்டல், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இவர், 56 சுற்றுகள் கொண்ட பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 38 நிமிடம் 56.681 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவரை விட 4 நிமிடம் 20 வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்ட சகவீரர் மார்க் வெப்பர் இரண்டாவது இடம் பிடித்தார்.
மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன், வெட்டலை விட 12 நிமிடம் ஒரு நொடி அதிகமாக எடுத்துக்கொண்டு 3வது இடம் பிடித்தார்.
மற்றொரு மெர்சிடஸ் அணியின் வீரரான நிகோ ரோஸ்பர்க் 4வது இடம் பிடித்தார். பெராரி அணியின் பிலிப் மாசா 5வது இடம் பிடித்தார். லோட்டஸ் அணியின் ரோமியன் கிராஸ்ஜீன் 6வது இடம் பிடித்தார்.
முதல் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்ற லோட்டஸ் அணியின் மற்றொரு வீரர் கிமி ரெய்கோனன் தகுதி சுற்றில் மெர்சிடஸ் வீரர் நிகோ ராஸ்பெர்கை தடுத்ததால் மூன்று இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 10வது இடத்தில் இருந்து போட்டியை தொடங்கினார்.
இறுதியில் ரெய்கோனன் 7வது இடம் பிடித்தார். ஜேர்மன் வீரர் நிகோ ஹல்கன்பர்க் 8வது இடத்தை பிடித்தார். மெக்லாரன் மெர்சிடஸ் அணி வீரர் செர்ஜியோ பெரிஸ் 9வது இடமும், எஸ்.டி.ஆர் பெராரியின் ஜீன் எரிக் 10வது இடம் பிடித்தார்.
மலேசியாவில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற பெராரி அணியின் பெர்ணான்டோ அலோன்சா, முதல் சுற்றில் வெட்டலின் கார்மோதி வெளியேறியதால் கடைசி இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
இவரைத் தவிர, போர்ஸ் இந்தியா மெர்சிடஸ் சார்பில் பங்கேற்ற அட்ரியன் சுடில், பால் டி ரெஸ்டா ஆகியோர் காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதியில் வெளியேறினர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக