7 மார்., 2013

ஆஸ்டன் வில்லா அணிக்கெதிரான பிறீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் பல்வேறு பகுதியில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டியில்
மான்செஸ்டர் சிட், ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு கார்லோஸ் (45) ஒரு கோல் அடித்தார்.
இதற்கு ஆஸ்டன் வில்லா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
பின்னர் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களின் கோல் முயற்சி பலிக்கவில்லை. முடிவில், மான்செஸ்டர் சிட்டி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை நடந்த 28 போட்டியின் முடிவில், மான்செஸ்டர் சிட்டி அணி (59 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட் (71) முதலிடத்திலும், டாட்டன்ஹாம் அணி (54) மூன்றாவது இடத்திலும் உள்ளது.

கருத்துகள் இல்லை: