7 மார்., 2013


சர்வதேச ஒலிம்பிக் மதிப்பீட்டுக் குழு ஜப்பானுக்கு விஜயம் 

2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவை நடாத்துவதற்கான டோக்கியோவின் திட்டங்கள் குறித்து ஆராயும் நோக்கில் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் மதிப்பீட்டுக் குழு  ஜப்பானுக்கு நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் உப தலைவர் கிரெய்க் ரெடி தலைமையிலான குழு, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை டோக்கியோவின் திட்டங்கள் குறித்து ஆராயவுள்ளது.
விழா நடைபெறும் இடங்கள், பாதுகாப்பு, தங்குமிட வசதிகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது மதிப்பிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவினை நடாத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மற்றைய நகரங்களான மட்ரிட் மற்றும் இஸ்தான்புல்லிற்கு மதிப்பீட்டுக் குழு இந்த மாத இறுதியில் விஜயம் செய்யவுள்ளது.
அதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு மூலமாக ஒலிம்பிக் விழாவினை நடாத்தும் நகரம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: