சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவில் தொடரை முழுமையாக இழந்தது.
இதனால் தரவரிசையில் சரிவு ஏற்பட்டதுடன் ஏகப்பட்ட விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கெதிரான தொடரிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் இந்திய அணி தொடர்ந்து இரு போட்டியில் அசத்தலாக விளையாடி அபார வெற்றி பெற்றது.
நேற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய மண்ணில் பங்கேற்ற 6 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை பெற்றார் டோனி.
இந்த அணிக்கெதிராக 6 டெஸ்டில் வென்ற முதல் இந்திய அணித்தலைவர் டோனி தான். அன்னிய மண்ணில் ஒரே அணித்தலைவருக்கெதிராக தொடர்ச்சியாக 6 டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி தோற்பது இது தான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக