7 மார்., 2013


மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அதிரடி துவக்க வீரர் சேவக் நீக்கப்பட்டார்.
சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் "சீனியர்' துவக்க வீரர் சேவக், 34. இவர், கடைசியாக விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரைசதம்
கூட அடிக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின் நான்கு இன்னிங்சில், மொத்தம் 27 ரன்கள் தான் எடுத்தார். இருப்பினும், இந்திய அணி வெற்றி பெற்றதால், மீதமுள்ள போட்டிகளிலும் சேவக் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய திருப்பமாக சேவக் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவருக்குப் பதில் புதியதாக யாரும் சேர்க்கப்படவில்லை. அதாவது 15 பேர் கொண்ட அணிக்குப் பதிலாக 14 பேர் கொண்ட அணியாக குறைக்கப்பட்டது. 

அணி விவரம்: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், சச்சின், புஜாரா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், ரகானே, பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் மற்றும் டிண்டா.

கருத்துகள் இல்லை: