லண்டனில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில், ரஷ்யா அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.
பின்னர் இரண்டாவது பாதியில் விக்டர் (73வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க ரஷ்யா முன்னிலை பெற்றது. இதற்கு கடைசி நிமிடத்தில் பிரேசிலின் பிரட் பதிலடி கொடுத்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
கடைசி நேரத்தில் சூடுபிடித்த இந்த போட்டி முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் “டிரா” ஆனது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த மற்றொரு போட்டியில் பெலாரஸ், கனடா அணிகள் மோதின. இதில் முதல் பாதியின் 29வது நிமிடத்தில், பெலாரஸ் அணிக்கு விடாலி ரோடினோவா முதல் கோல் அடித்தார். இதற்கு கனடா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
பின் இரண்டாவது பாதியிலும் அசத்திய பெலாரஸ் அணிக்கு விலாடிமிர் (88) ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கனடா அணி வீரர்களின் கோல் முயற்சி எதுவும் கைகொடுக்கவில்லை.
முடிவில், பெலாரஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக