மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. போட்டியின் முதல்
பாதியில் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
பின்னர் இரண்டாவது பாதியில் ரியல் மாட்ரிட் அணியின் ராமோஸ் (48வது நிமிடம்) “சேம் சைடு” கோல் அடித்தார். போட்டியின் 66வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ரியல் மாட்ரிட் அணிக்கு லூகா மோட்ரிக் ஒரு கோல் அடிக்க போட்டி சமநிலை வகித்தது.
சில நிமிடத்தில் ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (69) ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்களால் பதிலடி கொடுக்கமுடியவில்லை.
முடிவில், ரியல் மாட்ரிட் அணி 2-1 வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக