சர்வதேச செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 4 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ரவுண்டு ராபின் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது.முதல் 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்த நிலையில் 4-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இத்தாலியின் பேபியானோ கருணாவிடம் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். விளாடிமிர் கிராம்னிக்-போரிஸ் கெல்பான்ட் ஆகியோருக்கு இடையிலான போட்டி கடும் போராட்டத்துக்கு பிறகு டிராவில் முடிந்தது.
விளாடிமிர் கிராம்னிக், போரிஸ் கெல்பான்ட் ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனந்த்தை வீழ்த்தியதன் மூலம் கருணா 2.5 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார். இன்னும் 2 சுற்றுகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் கருணா சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக